கேஸ் ஸ்டவ் பயன்படுத்தும்போது நாம தெரிஞ்சோ தெரியாமலோ சில தவறுகளை செய்றோம். அந்த தவறுகளை தவிர்த்தாலே ஸ்டவ் நீண்ட நாள் உழைக்கும். அது என்னென்ன தவறுகள்னு பார்க்கலாம் வாங்க.
life-style Aug 24 2026
Author: Vedarethinam Ramalingam Image Credits:AI
Tamil
சரியான இடத்தில் வைங்க
கேஸ் ஸ்டவ்வை நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். மூடிய அறையில் அல்லது காத்து உள்ளே வராத இடத்தில் வைத்தால், அது ஆபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Image credits: Getty
Tamil
சுத்தம் செய்யாமல் இருப்பது
சமையல் செய்யும்போது எண்ணெய், உணவுப் பொருட்கள் சிந்தி ஸ்டவ் மீது கறை படிவது சகஜம். ஸ்டவ் நல்லா வேலை செய்யணும்னா, அதை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது ரொம்ப முக்கியம்.
Image credits: Getty
Tamil
கடுமையான கிளீனர்கள்
கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்ய வீரியம் அதிகமான கெமிக்கல் கிளீனர்களைப் பயன்படுத்த வேண்டாம். இது ஸ்டவ்வின் பாகங்களை சேதப்படுத்தி, அதன் ஆயுளைக் குறைத்துவிடும்.
Image credits: Getty
Tamil
பொருத்தமில்லாத பாத்திரங்கள்
உங்க கேஸ் ஸ்டவ்வின் பர்னருக்குப் பொருத்தமான பாத்திரங்களை மட்டும் பயன்படுத்துங்கள். ரொம்ப சின்ன அல்லது ரொம்ப பெரிய பாத்திரங்களை வைத்தால், ஸ்டவ் சேதமடைய வாய்ப்புள்ளது.
Image credits: Getty
Tamil
அதிக எடை கொண்ட பாத்திரங்கள்
குறிப்பாக, கிளாஸ் டாப் கேஸ் ஸ்டவ் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதிக எடை கொண்ட பாத்திரங்களை அதன் மீது வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
Image credits: Getty
Tamil
எலிகளிடம் ஜாக்கிரதை
வீட்டில் எலிகள் இருந்தால் கூடுதல் கவனம் தேவை. எலிகள் கேஸ் டியூப் போன்ற பாகங்களைக் கடித்து சேதப்படுத்த வாய்ப்புள்ளது. இது பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
Image credits: Getty
Tamil
ஈரப்பதம் தேங்குவது
சமையலறையில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், அதுவும் ஸ்டவ்வுக்கு நல்லதல்ல. ஈரப்பதம் காரணமாக கேஸ் ஸ்டவ்வின் இரும்பு பாகங்கள் துருப்பிடிக்க ஆரம்பித்துவிடும்.