- Home
- Business
- பேங்க் வட்டியை விட இதுதான் பெஸ்ட்! மாசம் மாசம் சம்பளம் மாதிரி பணம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
பேங்க் வட்டியை விட இதுதான் பெஸ்ட்! மாசம் மாசம் சம்பளம் மாதிரி பணம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
தபால் நிலையத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) ஒருமுறை முதலீட்டில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை வழங்குகிறது. 7.4% வட்டி விகிதத்துடன், தனிநபர் கணக்கில் ₹9 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ₹5,550 வரை வட்டி வருமானம் பெறலாம்.

போஸ்ட் ஆபிஸ் திட்டம்
தபால் நிலையத்தின் இந்த MIS திட்டத்தில் ஒருமுறை பணத்தை முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் வட்டித் தொகையை மட்டும் வருமானமாகப் பெறலாம். மத்திய அரசு வழங்கும் இந்தத் திட்டத்தில் உங்கள் முதலீட்டிற்கு 100% பாதுகாப்பு உண்டு.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
• வட்டி விகிதம்: தற்போது இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.40% வட்டி வழங்கப்படுகிறது.
• முதலீட்டு வரம்பு: தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ₹9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கு தொடங்கினால் அதிகபட்சமாக ₹15 லட்சம் வரை முதலீடு செய்யலாம் (3 நபர்கள் வரை சேரலாம்).
• முதிர்வு காலம்: 5 ஆண்டுகள்.
• தகுதி: 18 வயது பூர்த்தியடைந்த எவரும் இதில் கணக்கு தொடங்கலாம்.
மாதம் ₹5,500 வருமானம் பெறுவது எப்படி?
இந்தத் திட்டத்தில் ₹5,500 மாதாந்திர வருமானம் பெற நீங்கள் அதிகபட்ச முதலீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும். அதன் கணக்கீடு இதோ:
நீங்கள் ஒரு தனிநபர் கணக்கைத் தொடங்கி அதில் ₹9 லட்சம் முதலீடு செய்தால், 7.4% வட்டி விகிதத்தின்படி உங்களுக்கு மாதம் ₹5,550 வட்டியாகக் கிடைக்கும்.
இதுவே கூட்டுக் கணக்கில் ₹15 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ₹9,250 வரை வருமானம் பெற முடியும்.
முன்கூட்டியே கணக்கை முடித்தால்...
இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னரே பணத்தை எடுக்க நினைத்தால் சில அபராதக் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
• 1 - 3 ஆண்டுகளுக்குள்: உங்கள் அசல் தொகையில் 2% கழிக்கப்படும்.
• 3 - 5 ஆண்டுகளுக்குள்: உங்கள் அசல் தொகையில் 1% கழிக்கப்படும்.
• கணக்கு தொடங்கி 1 ஆண்டு முடிவதற்குள் பணத்தை எடுக்க முடியாது.
விண்ணப்பிப்பது எப்படி?
உங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று, விண்ணப்பப் படிவம் மற்றும் KYC ஆவணங்களை (ஆதார், பான் கார்டு, புகைப்படம்) சமர்ப்பித்து வெறும் ₹1,000 முதலீட்டில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

