MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சிலிண்டர் விலை உயர்வு தொடங்கி மே 1 முதல் எல்லாமே மாறப்போகுது.! மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்ன? காட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.!

சிலிண்டர் விலை உயர்வு தொடங்கி மே 1 முதல் எல்லாமே மாறப்போகுது.! மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்ன? காட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.!

New Rules from May 1 2026 : ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இந்தியாவில் பல விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : Apr 28 2026, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
LPG சிலிண்டர் விலை மாற்றம்
Image Credit : Getty

LPG சிலிண்டர் விலை மாற்றம்

மே 1, 2026 முதல் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை மாற்றி அமைப்பது வழக்கம். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மே 1 முதல் வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

26
சிலிண்டர் புக்கிங் விதிகளில் மாற்றம்
Image Credit : Getty

சிலிண்டர் புக்கிங் விதிகளில் மாற்றம்

ஏற்கனவே நகரங்களில் 25 நாட்களுக்கு ஒரு முறையும் கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியும் என்கிற விதி இருந்து வருகிறது. அதேபோல் சிலிண்டர் சப்ளையில் வெளிப்படை தன்மையை கொண்டு வர OTP அடிப்படையிலான டெலிவரி முறை 100% கட்டாயப்படுத்தப்பட உள்ளது. ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் இருந்தால் அவற்றை இணைக்க அல்லது ஒன்றை ரத்து செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போலி இணைப்புகளை கண்டறிந்து நீக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டப் பயனாளிகள் மற்றும் மானியம் பெறுவோர் ஆதார் அடிப்படையில் செய்திருக்க வேண்டியது அவசியம்.

Related Articles

Related image1
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?
Related image2
இனிமே LPG கேஸ் வாங்கவே வேண்டாம்.! வருகிறது புதிய மாற்று.! கரண்ட் மாதிரி இனிமே 24 மணி நேரமும் கேஸ் கிடைக்கப்போகுது.!
36
எஸ்பிஐ கிரெடிக் கார்டுகள் தாமதக் கட்டணம்
Image Credit : Bloomberg.com

எஸ்பிஐ கிரெடிக் கார்டுகள் தாமதக் கட்டணம்

எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மே 1 முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. எஸ்பிஐ வங்கி இதற்கு முன்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.500 வரை நிலுவைத் தொகைக்கு தாமத கட்டணம் வசூலிக்காமல் இருந்து வந்தது. ஆனால் இனி ரூ.100-க்கு மேல் ரூ.500 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு ரூ.100 தாமதக் கட்டணம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. ரூ.500 தொடங்கி ரூ.1,000 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு தாமத கட்டணம் ரூ.500 ஆக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகை ரூ.1000-ஐ தாண்டினால் தாமதக் கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என கூறியுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதிக்குள் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால் தாமதக் கட்டணம் விதிக்கப்படும் என்றும், தொடர்ச்சியாக இரண்டு பில்லிங் சுழற்சிகளுக்குள் இந்த குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்து தவறுபவர்களுக்கு மேலும் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

46
HDFC வங்கி எஸ்எம்எஸ் கட்டணம்
Image Credit : Gemini

HDFC வங்கி எஸ்எம்எஸ் கட்டணம்

HDFC வங்கி தனது எஸ்எம்எஸ் சேவைகளுக்கான புதிய கட்டணங்களை மே ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வங்கி பரிவர்த்தனைகளின் பொழுது பாதுகாப்பு கருதி நம் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது ஒரு குறுஞ்செய்திக்கு 20 காசுகளுடன் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால் மே 1 முதல் ஒரு எஸ்எம்எஸ்-க்கு 15 காசுகளாக குறைக்கப்பட உள்ளது. மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் அலர்ட்டுகளை பெறுபவர்கள் இதுவரை 20 ரூபாயுடன் ஜிஎஸ்டியும் செலுத்தி வந்திருப்பீர்கள். ஆனால் இனிவரும் காலங்களில் அது 15 ரூபாயாக குறையும். அதே சமயம் மின்னஞ்சல் மூலம் பெறப்படும் அலர்ட்டுகளுக்கு கட்டணம் கிடையாது என்றும், அது முற்றிலும் இலவசமாக இருக்கும் என்றும் HDFC வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

56
ஆன்லைன் விளையாட்டுகளுக்கான புதிய விதிகள்
Image Credit : iSTOCK

ஆன்லைன் விளையாட்டுகளுக்கான புதிய விதிகள்

ஆன்லைன் விளையாட்டு தொடர்பான புதிய விதிமுறைகளை மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சூதாட்டம் இல்லாத சாதாரண விளையாட்டுகளுக்கு பதிவு அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளுக்கு கட்டாயப் பதிவு அவசியமாகும். இந்த விதிகள் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் அரசு தாமாகவோ அல்லது தேவைப்படும் இடங்களில் சில விளையாட்டுகளை கண்காணிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் துறை செயலாளர் கிருஷ்ணன் கூறுகையில் இந்த புதிய விதிகள் ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்ய உதவும் என்று தெரிவித்துள்ளார்.

66
EPFO விதிகளில் புதிய மாற்றம்
Image Credit : Asianet News

EPFO விதிகளில் புதிய மாற்றம்

தொழிலாளர் வருங்கால பைப்பு நிதி நிறுவனமான EPFO மே மாதம் முதல் புதிய நடைமுறைகளை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் PF பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பித்து மாத கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பணத்தை UPI அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி EPFO 3.O மூலம் கொண்டு வரப்படும் என்று சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நடைமுறை வரும் மே மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தங்கம் வாங்குவதில் புது டிரெண்ட்: நகையை விட முதலீட்டில் ஆர்வம் காட்டும் மக்கள்! நிபுணர்கள் சொல்லும் காரணம்!
Recommended image2
ஐஸ்கிரீம், சாக்லேட் விலை 20% வரை அதிரடி உயர்வு.! பின்னணி காரணம் கேள்விப்பட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
Recommended image3
Barrier Free Tolling : டோல் கேட்களில் இனி நிற்க வேண்டாம்.. FASTag + AI கேமரா.. இந்தியாவே மாறுது
Related Stories
Recommended image1
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?
Recommended image2
இனிமே LPG கேஸ் வாங்கவே வேண்டாம்.! வருகிறது புதிய மாற்று.! கரண்ட் மாதிரி இனிமே 24 மணி நேரமும் கேஸ் கிடைக்கப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved