- Home
- Business
- இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?
New Gold Mine Found in India : தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக புதிய தங்க சுரங்கம் ஒன்று இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

New Gold Mine Found in India
உலக அளவில் நிகழ்ந்து வரும் போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உட்சத்தை தொட்டு வருகிறது. பலரும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்ந்தெடுத்து வருகின்றனர். மேலும் உலக வங்கிகள் தங்கத்தை இருப்பு வைக்க தொடங்கியிருப்பதும், தங்கம் விலை உயர்வதற்கான காரணமாகும். அமெரிக்கா ஈரான் இடையே நடந்து வரும் போரினால் கச்சா எண்ணெய் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவிற்கு நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
இந்தியாவில் புதிய தங்கச் சுரங்கம்
ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் புதிய தங்க சுரங்கம் ஒன்று பயன்பாட்டிற்கு வரவுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் இந்தியாவின் முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் ஒரு சுரங்க திட்டமாகும். இது இந்தியாவின் தங்க உற்பத்தியில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள துப்பகுன்ட்லா, ஜொன்னகிரி மற்றும் கக்கிலி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இந்த தங்க சுரங்கம் அமைந்துள்ளது. கர்நாடகாவின் புகழ்பெற்ற ஹட்டி தந்த சுரங்க பகுதிகளுக்கு அருகில் இது அமைந்துள்ளது.
முதல் தனியார் தனியார் தங்க சுரங்கம்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தங்க சுரங்கம் விரைவில் தனது செயல்பாடுகளை துவங்க இருக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1000 கிலோ தங்கம் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டு இந்த சுரங்கம் விளங்குகிறது. இது இந்தியா ஆண்டுதோறும் இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவை கணிசமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் அமையப்போகும் முதல் தனியார் தனியார் தங்க சுரங்கமாக இது விளங்க இருக்கிறது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் மே மாதத்தின் தொடக்கத்தில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த திட்டத்தை முறைப்படி நாட்டிற்கு அர்பணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
42,500 கிலோ வரை தங்கம் கிடைக்கும்
இந்த தங்க சுரங்கம் கிட்டத்தட்ட 600 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆய்வு நிலையிலிருந்து தற்போது அடுத்த கட்ட நிலைக்கு முன்னேறி, உற்பத்தி நிலையை எட்டி இருக்கிறது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறையில் தகவல்களின்படி, இந்த பகுதியில் 13.1 டன் தங்க இருப்பு இருப்பதாகவும், இங்குள்ள மொத்த தங்கத்தின் அளவு 42.5 டன் வரை எட்டக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 42.5 டன் என்றால் 42,500 கிலோ வரை தங்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக ஆண்டுதோறும் சுமார் 1000 டன் தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா திகழ்ந்துவரும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதற்கட்டமாக 750 கிலோ தங்கம்
இந்த தங்க சுரங்கம் முழுமையான உற்பத்தியை தொடங்கிய பிறகு முதற்கட்டமாக சுமார் 750 கிலோ தங்கம் பிரித்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு திறந்த வெளி சுரங்கமாகும். அதாவது நிலத்தின் மேற்புறத்தில் இருந்து குழிதோண்டி தங்கம் எடுக்கப்படும். தங்கத்தை பிரித்தெடுப்பதற்கு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாறைகளை தவிர்த்து பொடியாக்கி, பின்னர் வேதியல் முறையில் தங்கம் பிரித்தெடுக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 நபர்களுக்கு நேரடியாகவும், ஆயிரக்கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். சுமார் ரூ.500 கோடி வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா தனது தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வரும் நிலையில் இந்த சுரங்கங்கள் இறக்குமதி சுமையை குறைக்க உதவும்.
டெக்கான்ட் கோல்ட் மைன்ஸ் பங்குகள் திடீர் உயர்வு
இந்த சுரங்கத்தில் தங்கம் எடுப்பதற்கான ஆரம்பகட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. 2026 மே மாதத்திற்குள் வணிக ரீதியிலான உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜொன்னகிரி தவிர ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தின் பிஸ்மத்தம் மற்றும் ராமகிரி போன்ற இடங்களிலும் தங்கம் இருப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெக்கான்ட் கோல்ட் மைன்ஸ் நிறுவனத்தின் ஜொன்னகிரி திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதையடுத்து அதன் பங்கு 24% அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் 16 சதவீதமாக இருந்த அந்த பங்கு கடந்த ஒரு மாதத்தில் 8% வரை அதிகரித்துள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட பிறகு இந்த நிறுவனத்தின் பங்குகள் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

