MSME : தொழில் தொடங்குறீங்களா? 50+ அரசு திட்டங்களில் பணம் பெறலாம்!
MSME : தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் ஏற்கெனவே தொழில் செய்பவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகளின் 50+ திட்டங்களை ஒரே இடத்தில் தொகுத்துள்ளது புதிய MSME திட்டத் தொகுப்பு. கடன், மானியம், தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

தொழில் தொடங்குறீங்களா? 50+ அரசு திட்டங்கள் ஒரே இடத்தில்!
தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பணம் எங்கிருந்து கிடைக்கும், அரசு உதவி என்ன இருக்கிறது, கடன் வாங்கினால் என்ன சலுகை கிடைக்கும், தொழிலை வளர்க்க தொழில்நுட்ப உதவி கிடைக்குமா என்று பல கேள்விகள் இருக்கும்.
இப்படிப்பட்ட தகவல்களை தனித்தனியாகத் தேட வேண்டிய நிலையை எளிதாக்கும் வகையில், 50-க்கும் மேற்பட்ட MSME மற்றும் ஸ்டார்ட் அப் திட்டங்களின் தொகுப்பு ஒன்றை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 26-ம் தேதி நடைபெற்ற உதயம் சம்வாத் 2026 நிகழ்ச்சியில் இந்தத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில் மத்திய அரசின் திட்டங்களும், டெல்லி அரசின் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. நிதி உதவி, தொழில் வளர்ச்சி, தொழில்நுட்பம், சந்தை வாய்ப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அப்படியானால், தொழில் தொடங்குபவர்களுக்கு இதில் உண்மையில் என்ன பயன்?
இதையும் படிங்க : Glass Idli : இட்லி தட்டு வேண்டாம்! டம்ளரில் பஞ்சு மாதிரி இட்லி செய்வது எப்படி?
புதுசா தொழில் தொடங்குறீங்களா? இந்தத் திட்டம் முக்கியம்!
புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு முக்கியமான திட்டங்களில் ஒன்று பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP). இதன் மூலம் புதிய குறு நிறுவனங்களை அமைக்க கடன் இணைந்த மானிய உதவி வழங்கப்படுகிறது. உற்பத்தித் துறையில் ஒரு திட்டத்திற்கான அதிகபட்ச அனுமதிக்கப்படும் செலவு ரூ.50 லட்சம் வரையும், சேவை மற்றும் வணிகத் துறையில் ரூ.20 லட்சம் வரையும் உள்ளது. தகுதியைப் பொறுத்து மானிய விகிதமும் மாறுபடும்.
உதாரணமாக, புதிய சிறு தொழில் தொடங்க நினைக்கும் ஒருவர் கடன் பெறும்போது, தகுதி இருந்தால் திட்டத்தின் கீழ் மானிய உதவியையும் பெற முடியும். அதாவது, அரசு நேரடியாக எல்லோருக்கும் பணத்தை இலவசமாக கொடுக்கும் திட்டம் அல்ல. தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடனுடன் இணைந்த உதவி இது.
இதையும் படிங்க : Curd : உறைமோர் இல்லாமல் தயிர் உறைய வைக்க முடியுமா? இந்த டெக்னிக் ஃபாலோ பண்ணுங்க!
வங்கி கடன் கிடைக்குமா என்ற கவலையா? இந்தத் திட்டத்தை பாருங்க!
சிறு தொழில் தொடங்கும்போது பெரிய பிரச்சினை என்ன? கடன் பெறுவதுதான். இதற்காக MSME துறையில் க்ரெடிட் கியாரண்டி ஸ்கீம் / CGTMSE போன்ற திட்டங்கள் உள்ளன. இதன் நோக்கம், தகுதியான குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு கடன் உத்தரவாத ஆதரவை வழங்கி, வங்கிக் கடன் பெறுவதற்கான தடைகளை குறைப்பதாகும்.
குறிப்பாக தொழில் தொடங்க விரும்புபவர்கள், எவ்வளவு கடன் வேண்டும் என்பதோடு மட்டும் நிறுத்தாமல், அந்தக் கடனுக்கு அரசு சார்ந்த கடன் உத்தரவாதத் திட்டம் பொருந்துமா என்பதையும் விசாரிக்கலாம். இது உங்கள் கையில் இலவசமாக பணம் வந்து சேரும் திட்டம் அல்ல. ஆனால் தகுதியுள்ள தொழில்களுக்கு கடன் அணுகலை எளிதாக்கும் ஆதரவு கிடைக்கக்கூடிய வழியாகும்.
இதையும் படிங்க : Sani Retrograde : சனி வக்கிரத்தில் இருக்கும்போது இந்த 5 ராசிக்காரர்கள் செய்யும் தவறுகள் என்ன பாதிப்பை தரும்?
மெஷின் வாங்கி தொழிலை வளர்க்கணுமா? அரசின் உதவி இருக்கு!
ஏற்கெனவே தொழில் செய்து வருபவர்களுக்கு அடுத்த பிரச்சினை, பழைய இயந்திரத்திலேயே எவ்வளவு நாள்தான் தொழில் செய்ய முடியும்? தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் MSME துறையில் திட்டங்கள் உள்ளன.
உதாரணமாக, தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான கடன் சார்ந்த மானியத் திட்டத்தில் தகுதியான குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக 15% வரை முன்பண மானியம், அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை வழங்கப்பட்ட திட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன.
அதேபோல் MSME துறையின் தற்போதைய திட்டப் பட்டியலில் தொழில்நுட்ப மையங்கள், MSME Champions, ZED, LEAN போன்ற தொழில்நுட்பம் மற்றும் தர மேம்பாட்டுத் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. அதனால் தொழில் வளர்ச்சிக்கு புதிய இயந்திரம், தரம், உற்பத்தித்திறன் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களும் அரசு திட்டங்களைப் பார்க்கலாம்.
இதையும் படிங்க : Ashoka Halwa : நாக்குல பட்டா கரைஞ்சுடும்! திருவையாறு ஸ்பெஷல் அசோகா அல்வா செய்வது எப்படி?
பொருள் தயாரிச்சாச்சு... ஆனால் விற்பனை எப்படி?
ஒரு தொழிலுக்கு கடன் கிடைத்தாலும், பொருள் தயாரித்தாலும் அடுத்த கேள்வி, வாடிக்கையாளர் எங்கே? இதற்காக MSME துறையில் சந்தை ஆதரவு தொடர்பான திட்டங்களும் உள்ளன. கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு திட்டம், சர்வதேச ஒத்துழைப்புத் திட்டம், MSME டீம் போன்ற திட்டங்கள் சந்தை அணுகல் மற்றும் வணிக விரிவாக்கத்துடன் தொடர்புடையவை.
குறிப்பாக MSME டீம் திட்டத்தின் நோக்கங்களில் சிறு நிறுவனங்களை மின்னணு வர்த்தகத்துக்குள் கொண்டு வருவது, பொருட்களின் பட்டியலிடல் மற்றும் ஆன்லைன் விற்பனை தொடர்பான உதவிகளை வழங்குவது ஆகியவை அடங்கும். அதாவது தொழில் தொடங்குவது மட்டுமல்ல, உங்கள் பொருளை சந்தைக்குக் கொண்டு செல்வதற்கும் அரசு சார்ந்த ஆதரவு வழிகள் இருக்கின்றன.
இதையும் படிங்க : Kulfi : கடையில வாங்க வேண்டாம்! டேஸ்டியான 5 குல்ஃபி ரெசிப்பிகள்.. வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!
வெளிநாட்டுக்கு பொருட்களை விற்க நினைக்கிறீங்களா?
உள்நாட்டு சந்தையைத் தாண்டி ஏற்றுமதி செய்ய நினைக்கும் தொழில்களுக்கும் சில திட்டங்கள் இருக்கின்றன. MSME துறையின் திட்டப் பட்டியலில் சர்வதேச ஒத்துழைப்புத் திட்டம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் டெல்லி அரசு வெளியிட்டுள்ள புதிய தொகுப்புடன் இணைந்து, ஏற்றுமதி வாய்ப்புகளுக்காக ஏற்றுமதி வளர்ச்சிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் சந்தைகளை நோக்கி நிறுவனங்களுக்கு உதவுவதே இதன் நோக்கங்களில் ஒன்று.
இதனால் சிறு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு சந்தை பற்றிய தகவல், வாய்ப்புகள் மற்றும் வணிக விரிவாக்கம் குறித்து தேடத் தொடங்க ஒரு வழி கிடைக்கிறது. ஆனால் ஏற்றுமதி செய்ய அரசு திட்டம் இருப்பதால் மட்டும் பொருள் வெளிநாட்டுக்குச் சென்றுவிடாது. தயாரிப்பு தரம், உரிய பதிவு, ஏற்றுமதி விதிமுறைகள், சந்தைத் தேவை ஆகியவற்றையும் தொழில் நிறுவனங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : Oven Cooking : ஓவனில் சமைத்தால் கேன்சர் வருமா? இப்படி சமைச்சுப் பாருங்க.. பாதுகாப்பா சாப்பிடலாம்!
தொழில் செய்துகிட்டே இருக்கீங்க... பணம் வரலையா?
இது பல சிறு தொழில் நிறுவனங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை. பொருளை விற்றுவிட்டோம். ஆனால் வாடிக்கையாளர் பணம் கொடுக்க தாமதிக்கிறார். இதற்காக MSME துறையின் MSME ODR திட்டம் உள்ளது. இது தாமதமான பணப்பரிவர்த்தனை தொடர்பான பிரச்சினைகளை ஆன்லைன் முறையில் விரைவாகத் தீர்க்க உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் MSME துறையின் RAMP திட்டத்தின் கீழ் MSE-GIFT, MSE-SPICE, MSE-ODR, MSME TEAM போன்ற துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பசுமை தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சார்ந்த முதலீடு, தாமதமான பணப்பரிவர்த்தனை, மின்னணு வர்த்தகம் போன்ற வெவ்வேறு தேவைகளை இவை குறிவைக்கின்றன. அதனால் அரசு உதவி என்பது தொழில் தொடங்க பணம் மட்டும் என்ற அளவில் இல்லை.
இதையும் படிங்க : Empty Salna : ஹோட்டல் ஸ்டைலில் காரசாரமா பரோட்டா சால்னா! சுலபமாக செய்வது எப்படி?
50+ திட்டங்களில் உங்களுக்கு எது பொருந்தும்?
ஒரே ஒரு அரசு திட்டம் எல்லா தொழில்களுக்கும் பொருந்தாது.
- புதிதாக தொழில் தொடங்குகிறீர்களா? : PMEGP போன்ற கடன் இணைந்த திட்டங்களைப் பாருங்கள்.
- கடன் தேவைப்படுகிறதா? : க்ரெடிட் கேரண்டி திட்டங்கள் உங்களுக்கு பொருந்துமா என்று பாருங்கள்.
- இயந்திரம் அல்லது தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டுமா? : தொழில்நுட்ப மேம்பாடு, தொழில்நிட்ப மையங்கள், ZED, LEAN போன்ற திட்டங்களைப் பாருங்கள்.
- பொருளை ஆன்லைனில் விற்க வேண்டுமா? : MSME டீம் உள்ளிட்ட சந்தை ஆதரவு திட்டங்களைப் பாருங்கள்.
- வெளிநாட்டு சந்தையை நோக்கிச் செல்ல வேண்டுமா? : சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி தொடர்பான வாய்ப்புகளைப் பாருங்கள்.
- வாடிக்கையாளரிடம் சிக்கிய பணத்தைப் பெற வேண்டுமா? : MSME ODR போன்ற வசதிகளைப் பாருங்கள்.
இந்த 50+ திட்டங்களின் தொகுப்பு டெல்லி அரசு வெளியிட்டது. அதில் மத்திய அரசின் திட்டங்களும் டெல்லி அரசின் திட்டங்களும் கலந்துள்ளன என்பதால், ஒவ்வொரு திட்டத்துக்கும் தகுதி, மாநில வரம்பு, தொழில் வகை, பதிவு உள்ளிட்ட விதிமுறைகளைத் தனித்தனியாக சரிபார்த்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு திட்டம் இருக்கிறது என்பதற்காக உடனே பணம் கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். உங்களுடைய தொழிலுக்கு எந்தத் திட்டம் பொருந்துகிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் முதல் வேலை!
இதையும் படிங்க : Mango : வீட்டுத் தொட்டியில் செடி வளர்த்து மாம்பழம் சாப்பிட ஆசையா? சூப்பர் டிப்ஸ் இதோ!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

