தட்கல் டிக்கெட் ரத்து என்றாலே ரீஃபண்ட் கிடைக்கும்னு நினைச்சீங்களா? உண்மை வேற!
தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பணம் திரும்பக் கிடைக்குமா என்பது பலரின் சந்தேகம். உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளுக்கு ரீஃபண்ட் கிடைக்குமா? போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை காணலாம்.

தட்கல் ரீஃபண்ட் விதிகள்
திடீரென பயண திட்டம் மாறுவது, அவசர வேலைகள் வருவது போன்ற காரணங்களால் பலர் குறுகிய நேரத்தில் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அப்போது இருக்கையை உறுதி செய்ய உதவும் ஒரு முக்கிய வசதி தான் தட்கல் டிக்கெட். இது அவசர பயணிகளுக்கான முன்பதிவு முறையாகும். பொதுவாக பயண நாளுக்கு ஒரு நாள் முன்பு தட்கல் முன்பதிவு செய்ய முடியும். ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கு, நான்-ஏசி வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கும். இதை ஐஆர்சிடிசி ஆன்லைன் மூலமாகவும் அல்லது ரயில் நிலைய கவுண்டரில் நேரடியாகவும் பதிவு செய்யலாம்.
தட்கல் டிக்கெட் ரத்து
ஆனால் தட்கல் டிக்கெட் வாங்கிய பிறகு பலருக்கும் வரும் பெரிய சந்தேகம், “இதை ரத்து செய்தால் ரீஃபண்ட் கிடைக்குமா?” என்பதுதான். தட்கல் டிக்கெட்டுகளுக்கான ரத்து விதிகள் சாதாரண டிக்கெட்டுகளைவிட கடுமையானவை. பலர் “ரத்து செய்தால் குறைந்தபட்சம் ஒரு பகுதி தொகை திரும்ப வரும்” என்று நினைப்பார்கள். ஆனால் தட்கலில் அது எல்லா நேரமும் நடக்காது. குறிப்பாக உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் என்றால், அதை நீங்கள் உங்கள் விருப்பப்படி ரத்து செய்தால் பெரும்பாலான சூழ்நிலையில் பணம் திரும்ப கிடைக்காது. திட்டம் மாற்றம், தேதி தவறு, ரயில் தவறுதல் போன்ற காரணங்கள் இருந்தாலும் ரீஃபண்ட் கிடைக்க வாய்ப்பு குறைவு.
தட்கல் ரீஃபண்ட்
இதற்குப் பிறகு இன்னொரு முக்கிய விஷயம், காத்திருப்பு பட்டியலில் இருக்கும் தட்கல் டிக்கெட். இந்த வகை டிக்கெட் உறுதி ஆகாததால், அதை ரத்து செய்யும்போது சாதாரண காத்திருப்பு டிக்கெட் மாதிரி ரீஃபண்ட் கிடைக்க முடியும். சார்ட் தயாரிக்கும் முன் நீங்கள் ரத்து செய்தால், சில நிர்ணயிக்கப்பட்ட ரத்து கட்டணத்தை கழித்த பிறகு மீதம் தொகை திரும்ப வழங்கப்படும். மேலும் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, ஐஆர்சிடிசி பல நேரங்களில் காத்திருப்பு தட்கல் டிக்கெட்டை தானாகவே ரத்து செய்து ரீஃபண்ட் செயல்முறையையும் தொடங்கிவிடும்.
ரயில்வே தட்கல் விதிகள்
ஒரே டிக்கெட்டில் பல பயணிகள் இருந்தால், சிலருக்கு மட்டும் சீட் உறுதி ஆகி மற்றவர்கள் இன்னும் காத்திருப்பில் இருப்பது போன்ற சூழ்நிலைகளும் நடக்கும். இதை பகுதி உறுதிப்படுத்தப்பட்டது எனலாம். இப்படிப்பட்ட நேரத்தில் முழு டிக்கெட்டையும் ஒன்றாக ரத்து செய்தால் மட்டுமே, விதிகளுக்கு ஏற்ப ரத்து கட்டணம் கழித்து சில அளவில் ரீஃபண்ட் கிடைக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் சிலர் சீட் உறுதியானதால் பயணம் செய்து விட்டால், பிறகு “சிலருக்கு சீட் கிடைக்கவில்லை” என்ற காரணத்தால் ரீஃபண்ட் கேட்க முடியாது என்பதையும் பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

