- Home
- Business
- கடவுளே.. தங்கத்துக்கு ஒரு எண்டே இல்லையா? நேற்று ரூ.3,600.. இன்று ரூ.2,800 உயர்வு.. வெள்ளியின் நிலவரம்?
கடவுளே.. தங்கத்துக்கு ஒரு எண்டே இல்லையா? நேற்று ரூ.3,600.. இன்று ரூ.2,800 உயர்வு.. வெள்ளியின் நிலவரம்?
Chennai Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச பொருளாதார மாற்றங்களால், இன்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.2800 உயர்ந்து ரூ.1,14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக, தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது சாமானிய மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ரூ.3600 உயர்வு
நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கும், சவரனுக்கு ரூ.3600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இன்று ரூ.2800 உயர்வு
இந்நிலையில் இன்றைய (ஜனவரி 21) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2800 உயர்ந்து ரூ.1,14,000ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.14,250ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15,545ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.124,360ஆக விற்பனையாகிறது. இந்நிலையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக ரூ.6,400 உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தின் போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. வெள்ளி விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு கிராம் விலை ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.340,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது வெள்ளி நகை வாங்குவோர் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

