- Home
- Business
- இதை மீறினால் வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்.. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களே உஷார்
இதை மீறினால் வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்.. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களே உஷார்
வங்கிகளும் எளிதாக கார்டுகளை வழங்குவதால், செலவுகள் கட்டுப்பாட்டை மீறுகின்றன. ஆனால் வருமானத்திற்கும் மீறிய செலவுகள், சந்தேகமான பரிவர்த்தனைகள் ஆகியவை வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்க்கும்.

கிரெடிட் கார்டு ஐடி நோட்டீஸ்
இன்றைய காலத்தில் கிரெடிட் கார்டு என்பது வசதிக்கான ஒரு கருவி மட்டுமல்ல, கேஷ்பேக் மற்றும் ரிவார்ட் பாயிண்ட்ஸ் காரணமாக பலருக்கு ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. வங்கிகளும் எளிதாக கார்டுகளை வழங்குவதால், செலவுகள் கட்டுப்பாட்டை மீறுகின்றன. ஆனால் வருமானத்திற்கும் மீறிய செலவுகள், சந்தேகமான பரிவர்த்தனைகள் ஆகியவை வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்க்கும். இதனால் ஐடி நோட்டீஸ் வரக்கூடும் என்பதால் சில விஷயங்களில் அதிக கவனம் தேவை.
கிரெடிட் கார்டு
முக்கியமாக உற்பத்தி செலவு எனப்படும் நடைமுறை மிகவும் ஆபத்தானது. ரிவார்ட் பாயிண்ட்ஸ் பெறுவதற்காக நண்பர்கள் அல்லது உறவினர்களுக்காக கார்டைப் பயன்படுத்தி, பின்னர் அவர்களிடம் இருந்து பணம் பெறுவது தவறாகும். இப்படியான பணச் சுழற்சி ஆனது உங்களுக்கு அறிவிக்கப்பட்ட வருமானத்தை விட அதிகமாக இருந்தால், அது விளக்கமற்ற செலவாகக் கருதப்படும்.
வருமானவரி
மேலும், வாலெட் லோடிங் மற்றும் சுழற்சி பரிவர்த்தனைகள் ஐடி துறைக்கு எளிதில் ரெட் ஃப்ளாக் ஆகும். எந்த பொருள் அல்லது சேவை வாங்காமலே, அடிக்கடி வாலெட்டில் பணம் ஏற்றி, அதை மீண்டும் வேறு வழிகளில் மாற்றுவது சந்தேகத்தை ஏற்படுத்தும். போலியான வீட்டு வாடகை கட்டணங்களும் பிரச்சினை தரும். நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கிரெடிட் கார்டில் வாடகை செலுத்தி, பின்னர் பணத்தை மீட்டெடுத்தால் HRA கிலெயிம் கூட ரத்து செய்யப்படும்.
ரிவார்ட் பாயிண்ட்ஸ் வரி
தனிப்பட்ட கிரெடிட் கார்டை தொழில் செலவுகளுக்கு பயன்படுத்துவது தவறான நடைமுறை. அதில் கிடைக்கும் அதிகமான ரிவார்டுகள் தொழில் வருமானமாக கருதப்படலாம். பொதுவாக ரிவார்ட் பாய்ண்ட்ஸுக்கு வரி இல்லை. ஆனால் அவை பணமாக மாற்றப்பட்டால் அல்லது ஆண்டுக்கு ரூ.50,000 மதிப்பைக் கடந்தால், பிற வருமானமாக காட்டப்பட வேண்டும்.
கேஷ்பேக் வருமானவரி
எனவே, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பில் அல்லது இன்வாய்ஸ் சேமித்து வையுங்கள். உங்கள் ஐடிஆரில் காட்டும் வருமானத்துக்கும் கிரெடிட் கார்டு செலவுகளுக்கும் சமநிலை இருக்க வேண்டும். தேவையற்ற கேஷ் வித்திராவல் தவிர்க்கவும். ரிவார்டுகள் ஒரு கூடுதல் நன்மை தான். அவர்களுக்காக வரி விதிகளை மீறினால், உங்கள் நிதி பாதுகாப்பே பாதிக்கப்படும். வெளிப்படைத்தன்மை தான் பாதுகாப்பான வழி ஆகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

