- Home
- Business
- கூகுள் பே, போன்பே யூஸ் பண்றீங்களா? இந்த புது ரூல் தெரியலனா உங்க அக்கவுண்ட் க்ளோஸ் ஆகிடும்!
கூகுள் பே, போன்பே யூஸ் பண்றீங்களா? இந்த புது ரூல் தெரியலனா உங்க அக்கவுண்ட் க்ளோஸ் ஆகிடும்!
தேசியக் கொடுப்பனவு கழகத்தின் (NPCI) புதிய விதியின்படி, நீண்டகாலம் பயன்படுத்தப்படாத அல்லது துண்டிக்கப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட UPI ஐடிகள் முடக்கப்படலாம்.

UPI பயனர்கள் கவனத்திற்கு
இன்றைய காலத்தில் டீக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை அனைத்திற்கும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) அல்லது பேடிஎம் (Paytm) போன்ற UPI செயலிகளே பிரதானமாக உள்ளன. ஆனால், உங்களின் ஒரு சிறிய கவனக்குறைவு உங்கள் UPI கணக்கைத் தற்காலிகமாக முடக்கிவிடக்கூடும்.
புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள ஒரு முக்கிய விதிமுறை குறித்துப் பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
UPI கணக்கு ஏன் முடக்கப்படுகிறது?
பல நேரங்களில் நமது UPI ஐடி (UPI ID) செயலிழக்கச் செய்யப்படுகிறது, ஆனால் அது நமக்குத் தெரிவதில்லை. பேமெண்ட் செய்யும் போது தோல்வியடையும் போதுதான் கணக்கு முடக்கப்பட்டிருப்பதே பலருக்குத் தெரியவருகிறது. இதற்கு முக்கியக் காரணம், தவறான அல்லது காலாவதியான தகவல்களைப் பயன்படுத்துவதுதான்.
புதிய விதிமுறை என்ன சொல்கிறது?
தேசியக் கொடுப்பனவு கழகம் (NPCI) கொண்டுவந்துள்ள புதிய விதியின்படி, ஒவ்வொரு UPI கணக்கும் தற்போது பயன்பாட்டில் உள்ள (Active) சரியான மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு பயனர் நீண்ட நாட்களாகத் தனது மொபைல் எண்ணைப் பயன்படுத்தாமல் இருந்தாலோ அல்லது அந்த எண் துண்டிக்கப்பட்டிருந்தாலோ (Disconnected), அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட UPI ஐடி 'ஆபத்தானது' எனக் கருதப்படும்.
அடையாளச் சரிபார்ப்பு (KYC) முழுமையடையாத அல்லது நீண்ட காலம் பணப்பரிமாற்றம் செய்யப்படாத கணக்குகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இந்த விதி ஏன் கொண்டுவரப்பட்டது?
சைபர் குற்றங்களைத் தடுக்கவும், பணமோசடியைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிம் கார்டு மறுஒதுக்கீடு: ஒரு பயனர் தனது மொபைல் எண்ணைப் பயன்படுத்தாமல் விடும்போது, அந்த எண் வேறொரு புதிய நபருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
தவறான பரிமாற்றம்: பழைய பயனர் தனது UPI கணக்கை நீக்கவில்லை என்றால், புதிய பயனர் அந்த எண்ணைப் பயன்படுத்தும்போது பழைய வங்கியுடன் தொடர்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
பாதுகாப்பு: தரவு திருட்டு மற்றும் தவறான பணப்பரிமாற்றங்களைத் தவிர்க்கவே இந்தச் சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

