- Home
- Business
- ஐஆர்சிடிசி அதிரடி.. இது இல்லாமல் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாது.. முழு விபரம்
ஐஆர்சிடிசி அதிரடி.. இது இல்லாமல் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாது.. முழு விபரம்
இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை போலி கணக்குகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதை தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி புதிய விதி
இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 28, 2025 முதல், காலை 8 மணி முதல் 10 மணி வரை ரிசர்வேஷன் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் அனைவரும் ஆதார் அடையாளம் (Aadhaar Authentication) மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என ஐஆர்சிடிசிஅறிவித்துள்ளது. இந்த நேரத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப் பெரும் போக்குவரத்து நேரமாக இருப்பதால், பல போலி கணக்குகள் மூலம் டிக்கெட் முன்பதிவு நடைபெறுவதைத் தடுக்கிறது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு
முன்பு பல பயணிகள், ஆன்லைன் முகவர்களின் மூலம் ஒரே நேரத்தில் பல டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் முறையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதை தடுக்கும் நோக்கில், இப்போது காலை 8 மணி முதல் 10 மணி வரை டிக்கெட் பதிவு செய்யும் பயணிகள் ஆதார் சரிபார்ப்பு முடித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆனால் 10 மணிக்குப் பிறகு அல்லது இரவு நேரங்களில் வழக்கமானபடி டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதாவது, மற்ற நேரங்களில் ஆதார் சரிபார்ப்பு தேவையில்லை என்று ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.
ஆதார் சரிபார்ப்பு
ஆதார் இணைப்பு செய்யாதவர்கள் அதை உடனடியாக ஆன்லைனில் முடிக்கலாம். அதற்காக [www.irctc.co.in](http://www.irctc.co.in) தளத்தில் உள்நுழைந்து, “எனது கணக்கு” பகுதியில் உள்ள “பயனரை அங்கீகரிக்க” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி-ஐ உள்ளிட வேண்டும். பின்னர் உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்கள் திரையில் தோன்றும்; அவை சரியாக இருந்தால் OTP மூலம் உறுதிப்படுத்தலாம். OTP ஐ ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறலாம். OTP-ஐ உள்ளிட்டவுடன், “வெற்றிகரமாக அங்கீகரிக்கப்பட்டது” எனும் செய்தி வரும், இதன் மூலம் உங்கள் ஐஆர்சிடிசி கணக்கு ஆதார் இணைப்புடன் உறுதிப்படுத்தப்படும்.
ஆன்லைன் முன்பதிவு
மேலும், ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளதாவது அக்டோபர் 1, 2025 முதல் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவிலும் இதே விதி பொருந்தும். அதாவது, காலை டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்கள் ஆதார் இணைப்பு செய்த பயணிகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆனால் பேசஞ்சர் ரிசர்வேஷன் கவுண்டர்கள் (PRS) வழியாக நேரடியாக டிக்கெட் எடுப்பவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. மேலும், தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கும் ஆதார் சரிபார்ப்பு ஏற்கனவே கட்டாயமாகி விட்டது. இதன் மூலம் போலி முன்பதிவுகள் தடுக்கப்பட்டு, உண்மையான பயணிகளுக்கே டிக்கெட்டுகள் கிடைக்கும் என ரயில்வே நம்பிக்கை தெரிவித்துள்ளது.