ரூ.1,299-க்கு விமான டிக்கெட்.. இண்டிகோ அதிரடி ஆஃபர்.. கடைசி தேதி இதுதான்!
இண்டிகோ ஏர்லைன்ஸ் “Grand Runaway Fest Sale” எனும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதில் உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் ரூ.1,299 முதலும், சர்வதேச டிக்கெட்டுகள் ரூ.4,599 முதலும் கிடைக்கும்.

உள்நாட்டு விமான டிக்கெட் ரூ.1299
இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. “Grand Runaway Fest Sale” எனப்படும் இந்த ஆஃபரில், உள்நாட்டு விமான டிக்கெட் ரூ.1,299 முதல் மற்றும் சர்வதேச விமான டிக்கெட் ரூ.4,599 முதல் கிடைக்கும். இந்தச் சலுகை செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் நீங்கள் சுற்றுலா அல்லது தொழில் பயணத்திற்கான திட்டத்தை இப்போதே உறுதி செய்வது நல்லது வாய்ப்பு இது.
இண்டிகோ ஏர்லைன்ஸ்
இந்த ஆஃபரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ஜனவரி 7 முதல் மார்ச் 31, 2026 வரை பயணிக்க செல்லுபடியாகும். குறிப்பாக, IndiGo Bluechip உறுப்பினர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி கிடைக்கும். மேலும், IndiGo Stretch எனப்படும் சிறப்பு சேவையுடன் சில உள்நாட்டு ரூட்களில் ரூ.9,999 முதல் ஆரம்பிக்கும் பயண கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூரம் செல்லும் பயணிகள், அதிக வசதி நாடுபவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விமான டிக்கெட் முன்பதிவு
டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது மிகவும் எளிது. நீங்கள் IndiGo-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் ([www.goindigo.in](http://www.goindigo.in)), மொபைல் ஆப், AI சகாயம் 6Eskai அல்லது WhatsApp (+91 70651 45858) மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும், புளூசிப் உறுப்பினர்கள் IBC10 என்ற பிரோமோ கோடி இணையதளம் அல்லது ஆப்பின் மூலம் முன்பதிவு செய்தால் சிறப்பு தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகையில் பல்வேறு உள்நாட்டு ரூட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு விமான டிக்கெட் ரூ.4599
உதாரணமாக, கோச்சி–கோழிக்கோடு, மைசூர்–சென்னை, சேலம்–ஹைதராபாத், மும்பை–வதோதரா, டெல்லி–பிகானேர் போன்ற பல்வேறு பயணங்கள் வெறும் ரூ.1,299-க்கு கிடைக்கின்றன. சர்வதேச பயணங்களில் டெல்லி–காத்மாண்டு மற்றும் டெல்லி–டாக்கா போன்ற முக்கிய வழித்தடங்கள் ரூ.4,599 முதல் ஆரம்பமாகின்றன. குறைந்த விலையில் விமான டிக்கெட் பெறும் அபூர்வ சந்தர்ப்பம் என்பதால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுற்றுலா திட்டமிடுபவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது.
இந்தியா குறைந்த செலவு விமானம்
மேலும், இந்த விற்பனையின் போது 6E add-on சேவைகளில் பல தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கூடுதல் பார்சல் கட்டணத்தில் 50% வரை தள்ளுபடி, Fast Forward சேவையில் 50% வரை தள்ளுபடி, இருக்கை தேர்வில் 15% தள்ளுபடி, உணவுப் பொருட்களில் 10% தள்ளுபடி என பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதோடு, Emergency XL இருக்கைகள் ரூ.500 முதல் கிடைக்கின்றன. சர்வதேச பயணங்களுக்கு ‘Zero Cancellation Scheme’ ரூ.999 முதல் கிடைக்கும். மொத்தத்தில், குறைந்த செலவில் அதிக வசதியுடன் விமானப் பயணம் செய்ய விரும்புவோருக்கான சிறந்த வாய்ப்பு இது.