- Home
- Business
- India vs Pakistan Asia Cub Clash! 10 நொடி விளம்பரத்துக்கு இத்தனை லட்சங்கள் கட்டணமா? அடேங்கப்பா!
India vs Pakistan Asia Cub Clash! 10 நொடி விளம்பரத்துக்கு இத்தனை லட்சங்கள் கட்டணமா? அடேங்கப்பா!
ஆசியக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டியின்போது ஒளிபரப்பு செய்யப்படும் 10 நொடி விளம்பரத்துக்கு ரூ.16 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை 2025
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் விளையாடும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 போட்டி வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரில் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி
கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய பிறகு இப்போது தான் இரு அணிகளும் நேரடியாக மோதுவதால் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த போட்டிக்கு அதிகரித்துள்ள கிராக்கி காரணமாக விளம்பர நிறுவனங்கள் அதிக கட்டணம் கொடுத்து விளம்பர நேரத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. ஆசிய கோப்பை தொடர் முழுவதையும் சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நெட்வொர்க் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்ப உள்ளன.
10 நொடி விளம்பரத்துக்கு ரூ.16 லட்சம் கட்டணம்
இந்த நிறுவனம் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது ஓவர்களுக்கு இடையே ஒளிபரப்படும் 10 வினாடிகளுக்கான விளம்பர கட்டணத்தை ரூ.14 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கட்டணம் மிக அதிகமாக இருந்தாலும் தங்கள் பிராண்டுகளின் விளம்பரங்களை இடம்பெறச் செய்ய முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.
கடந்த 2023 ஆசிய கோப்பை மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை போட்டிகளின்போது, இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் விளம்பர கட்டணம் 10 வினாடிகளுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை இருந்தது.
போட்டி போடும் நிறுவனங்கள்
இப்போதும் விளம்பர கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும்போது அதிக பார்வையாளர்கள் டிவியில் பார்ப்பதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்தாலும் அதை பொருட்படுத்தமால் தங்கள் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்ய நிறுவனங்கள் மல்லுக்கட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி அறிவிப்பு
அந்த அணியின் முன்னணி வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளனர். ஆசியக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சலீம்சாதா ஃபர்ஹான், ஷாஹிர்ஃப், சலீம் அகமது மற்றும் சுஃப்யான் மொகிம்.