சம்பளத்துக்கேற்ப எவ்வளவு "Personal Loan" கிடைக்கும்?
தனிநபர் கடன்கள் அவசரத் தேவைகளுக்கு உதவினாலும், அதிக வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. வங்கிகள் கடன் வரம்புகளை வருமானம், கடன் மதிப்பெண் மற்றும் தற்போதைய கடன்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கின்றன. மாதச் சம்பளத்தைப் பொறுத்து கடன் தொகை மாறுபடும்
- FB
- TW
- Linkdin
Follow Us
)
கைகொடுக்கும் Personal Loan
தங்க நகைக்கடனுக்கு அடுத்தப்படியாக நமக்கு எளிதாக கிடைப்பது Personal Loan என்பதால், சம்பளதாரர்கள் பலரும் அதனை பெற முயற்சிக்கும் சூழல் தற்போது நிலவுகிறது என்கின்றனர் சந்தை நிபுணர்கள். நடப்பு சூழ்நிலையில் பணம் தேவைப்படும்போது பொதுவாக நாம் நினைப்பது Personal Loan தான். வீட்டின் அவசர தேவைகள், மருத்துவ செலவுகள், திருமண வசதிகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் போன்றவை வந்துவிடும்போது உடனடி தீர்வாகவே பசனல் லோன் (Personal Loan) அமைகிறது. மாத சம்பளம் வாங்குவோர் சம்பள ரசீதை சமர்ப்பித்தால் வங்கிகள் சில விசாரணைகளுக்கு பின்பு கடனை உடனே வழங்குகின்றன.
அவசரத்திற்கு உதவும் Personal Loan
மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு வங்கிகள் அதிகமாக பர்சனல் லோன் வழங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது ஒரு Unsecured Loan என்பதால் உங்களிடம் காப்புறுதி (Collateral) எதுவும் கேட்கப்படாது. ஆனால் அதற்கேற்ப வட்டி விகிதம் 12% முதல் 24% வரை இருக்கலாம். மற்ற கடன்களை விட கூடுதல் வட்டி என்பதால் எவ்வளவு பண நெருக்கடி வந்தாலும் பர்சனல் லோன் வாங்குவதை தவிர்க்கின்றனர்.
வங்கிகளின் வரம்புகள் என்ன?
பல்வேறு வங்கிகள் தனித்தனியாக லோனுக்கான வரம்புகளை நிர்ணயிக்கின்றன. உதாரணமாக, Axis Bank ₹40 லட்சம் வரை பசனல் லோன் வழங்குகிறது. ICICI Bank ₹50 லட்சம் வரை வழங்குகிறது. ஆனால் PNB மற்றும் BOI போன்ற சில வங்கிகள் ₹25 லட்சம் வரை மட்டுமே அனுமதிக்கின்றன. பல வங்கிகள் ₹20 லட்சம் முதல் ₹40 லட்சம் வரை மட்டுமே கடன் வழங்கும் வகையில் மேல் வரம்பை வைத்துள்ளன.பொருளாதார ரீதியாக பற்று திரும்பப்பெறும் (Repayment) திறனைக் கருத்தில் கொண்டு, வங்கிகள் கடன் வரம்பை நிர்ணயிக்கின்றன. ஒரு நபர் அதிக அளவிலான கடனை எடுத்துக்கொண்டு, அதனை தவறாமல் திருப்பி செலுத்த வேண்டும் என்பதே நோக்கம்.
லோன் அளவை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்
அதிக வருமானம் உள்ளவர்களுக்கு அதிக personal loan வழங்கப்படுகிறது. அதேபோல் நல்ல credit score (750 மேல்) வைத்திருப்பவர்கள் அதிக தொகையை பெற வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஏற்கனவே எடுத்துள்ள கடன்கள் உங்கள் புதிய loan வரம்பை குறைக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ₹5 லட்சம் கடனாக வாங்கியிருந்தால், புதிய லோனுக்கு அதிகபட்சம் ₹17 லட்சம் தகுதி இருந்தால், தற்போது உங்களுக்கு ₹12 லட்சம் மட்டுமே வழங்கப்படும்.
Personal Loan கிடைக்க இதெல்லாம் அவசியம்
பர்சனல் லோன் எடுக்கும்போது உங்கள் வருமானம், உங்கள் கடன் திருப்பி செலுத்தும் திறன், உங்கள் கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு சிறந்த வங்கியை தேர்வு செய்யுங்கள். அதிக லோன் தொகைக்கு விருப்பம் இருந்தால், monthly income உயர்வதும், credit score மேம்படுத்துவதும் முக்கியம். வங்கிகளின் புதிய வட்டி விகிதங்களை அறிந்து, EMI கணக்கீடுகளுடன் முன்னெச்சரிக்கையாக செயல்படுங்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப சிறந்த கடன் தீர்வை தேர்ந்தெடுங்கள்!முடிவில், தேவைக்கு ஏற்ப திட்டமிட்டு, நிதி மேலாண்மை செய்து, கடனை திரும்ப செலுத்தும் திறன் இருப்பது முக்கியம் என்பதை மறக்கவேண்டாம்.
உங்கள் சம்பளத்துக்கு ஏற்ப எவ்வளவு Loan?
சில வங்கிகள் உங்கள் மாத சம்பளத்தின் 20 மடங்கு வரை Personal Loan வழங்குகின்றன. உதாரணமாக, உங்கள் மாத வருமானம் ₹1 லட்சம் என்றால், ₹20 லட்சம் வரை லோன் பெற முடியும். அதேபோல் 25 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் பெரும் ஒருவர் 5 லட்சம் ரூபாய் வரை பர்சனல் கடன் பெறலாம் என்கின்றனர் பொருளாதார ஆலோசகர்கள்.
உண்மை சொல்லும் Personal Loan அட்டவணை
மாத வருமானம் பெறக்கூடிய Personal Loan (₹)
₹25,000 ₹5 லட்சம்
₹50,000 ₹10 லட்சம்
₹75,000 ₹15 லட்சம்
₹1 லட்சம் ₹20 லட்சம்
₹1.25 லட்சம் ₹25 லட்சம்
₹1.5 லட்சம் ₹30 லட்சம்
₹1.75 லட்சம் ₹35 லட்சம்
₹2 லட்சம் ₹40 லட்சம்