- Home
- Business
- வங்கி வாடிக்கையாளர்களுக்கு KYC விதிமுறையில் RBI புதிய திருத்தம் – இனி எல்லாமே ஈஸி தான்!
வங்கி வாடிக்கையாளர்களுக்கு KYC விதிமுறையில் RBI புதிய திருத்தம் – இனி எல்லாமே ஈஸி தான்!
வங்கி வாடிக்கையாளர்களுக்கு KYC விதிமுறையில் ரிசர்வ் வங்கி புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி வாடிக்கையாளர்கள் எளிதாக தங்களது KYCஐ புதுப்பித்துக் கொள்ளலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
ரிசர்வ் வங்கியின் KYC விதிமுறைகளின் திருத்தம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியானது KYC விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்த புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, வங்கி வாடிக்கையாளர்கள் இனி எளிய முறையில் தங்களது விவரங்கள் அடங்கிய KYCயை புதுப்பித்துக் கொள்ளலாம். இது கிராமப்புற வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும், எளிமையானதாகவும் இருக்கும்.
புதிய KYC விதிமுறைகளின் நோக்கம்
KYC புதுப்பிப்புகளை பூர்த்தி செய்ய்யாத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் பல ஆண்டுகளாக செயலற்ற நிலையிலேயே இருக்கின்றன. புதுப்பிக்கப்பட்ட KYC இல்லாத நிலையில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாகத்தான் கடந்த 12 ஆம் தெதி இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிப்பு வெளியிட்டது. இந்த புதிய KYC விதிமுறைகளின் நோக்கமே தொலைதூரத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் கூட தங்களது விவரங்களை மிக எளிதாக புதுபித்து கணக்கை செயலில் வைத்திருக்க உதவும் என்பதாகும்
KYC விதிமுறையில் மாற்றத்திற்கான காரணம்:
பொதுவாகவே வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு அறிவிப்பையும் தவறவிடுகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு KYC விதிமுறை பற்றி அறிந்திருப்பதில்லை. அவர்கள் வங்கியில் பணம் செலுத்த போகும் போது மட்டுமே KYC விதிமுறை பற்றி அறிந்து கொள்கின்றனர். இந்த புதிய KYC விதிமுறை இதற்கு பதில் அளிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கணக்கு செயலற்று இருக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக கணக்கை தொடங்க இந்த KYC விதிமுறை உதவும்.
ரிசர்வ் வங்கியின் DEA நிதி
கடந்த 2 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களால் தொடங்கப்பட்டு பண பரிவர்த்தனைகள் இல்லாத வைப்பு கணக்கை செயல்படாத கணக்கு என்று வகைப்படுத்துகிறது. இதே போன்று 10 ஆண்டுகளாக செயலற்று இருக்கும் கணக்குகளில் உள்ள இருப்பு தொகையை ரிசர்வ் வங்கியின் DEA நிதிக்கு மாற்ற வேண்டும். குறிப்பாக குறைந்த ஆபத்து, கிராமப்புற மற்றும் நன்மை-இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு, மீண்டும் செயல்படுத்துதல் மற்றும் புதுப்பிப்புகளை மிகவும் எளிதாக்குகின்றன.
வணிக நிருபர்கள் (BCகள்) KYCஐ புதுப்பிக்கலாம்:
இனி வங்கிகள் சுய உதவிக்குழுக்கள், என்ஜிஓ, உள்ளூர் கிரானா கடை உரிமையாளர்கள், நுண்நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமாக வாடிக்கையாளர்களின் KYC புதுப்பிப்புக்களை சேகரித்துக் கொள்ளலாம். வங்கிகள் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட வணிக நிரூபர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் சுய விவரங்களை நேரிலோ அல்லது மின்னணி முறையிலோ சமர்ப்பிக்க உதவலாம். மேலும், பயோமெட்ரிக் e-KYC-ஐ வாடிக்கையாளர் இருக்கும் இடத்திலேயே முடிக்க உதவலாம். தொலைதூரத்திலிருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கிளைக்கு செல்வதை இது தடுக்க உதவும்.
முன் கூட்டியே அறிவித்தல் மற்றும் திரும்ப திரும்ப நினைவூட்டுதல்:
KYC விவரங்களை கொடுப்பதற்கான கடைசி தேதி பற்றி வாடிக்கையாளர்களுக்கு வங்கி முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதற்கு வங்கி எஸ் எம் எஸ், இ மெயில் மற்றும் ஆப் ஆகிய 3 வழிகளை பயன்படுத்தியோ அல்லது கடிதம் மூலமாகவோ அவர்களுக்கு தெரியப்படுத்தலாம். அப்போதும் வாடிக்கையாளர்கள் வரவில்லை என்றால் கணக்கை டிஆக்டிவேட் செய்வதற்கு முன் கடைசி தேதி முடிந்த பிறகும் கூட வங்கி கடிதம், இ மெயில், ஆப், எஸ் எம் எஸ் ஆகிய வழிகள் மூலமாக தெரியப்படுத்தலாம். வங்கி மூலமாக அனுப்பப்படும் ஒவ்வொரு தரவையும் தணிக்கைக்காக பதிவு செய்யப்பட வேண்டும்.
வங்கியின் எந்த கிளையிலும் KYC புதுப்பிப்புகள் செய்யலாம்:
வாடிக்கையாளர்கள் தங்களது ஹோம் கிளையில் தான் KYC புதுப்பிப்புகள் செய்ய வேண்டும் என்பதில்லை. மாறாக தொலைதூரத்திலிருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் எந்தவொரு கிளையிலும் KYC புதுப்பிப்புகளை செய்து கொள்ளலாம். இது ஊர் விட்டு ஊர் சென்றவர்களுக்கும், தொலை தூரத்தில் இருப்பவர்களுக்கும் ஏதுவாக இருக்கும்.
டிஜிட்டல் முறை - ஆதார் OTP, வீடியோ KYC
புதிய KYC புதுப்பிப்புகள் முறையானது KYC புதுப்பிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கும் கருவிகளை அனுமதிக்கின்றன. உதாரணத்திற்கு ஆதார் OTP பயன்படுத்தலாம். அதோடு வங்கியுடன் வீடியோ அழைப்பில் KYCஐ புதுப்பித்துக் கொள்ளலாம். அப்படியும் இல்லை என்றால் பேப்பர் மூலமாக கொடுக்கப்படும் ஆவணங்களுக்குப் பதிலாக ஆதார் மூலமாக e-KYC ஐ புதுப்பித்துக் கொள்ளலாம்.
முகவரி மட்டும் மாறியிருந்தால் – சுய அறிக்கை
இதில் வங்கியில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆவணங்களில் உங்களது முகவரி மட்டும் மாறியிருந்தால் புதிதாக எந்தவித ஆவணங்களும் தேவையில்லை. அதற்கு பதிலாக ஒரே ஒரு சுய அறிக்கையை மட்டும் வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதனை வணிக நிரூபர்கள் சேகரித்துக் கொள்வார்கள்.
முகாம்கள் மூலமாக தெரியப்படுத்திட வேண்டும்:
கிராமப்புறங்களில் KYC புதுப்பிப்பு தொடர்பான முகாம்களை நடத்தி வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது. மேலும், ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்திட வேண்டும். வாடிக்கையாளர்கள் KYC புதுப்பிப்பது தொடர்பாக அவர்கள் அறிந்து கொள்வதற்கு பதிலாக அவர்களது வீட்டிற்கே கொண்டு சேர்த்திட வேண்டும் என்பது தான் இதனுடைய நோக்கம்.
எளிமையான விவரங்கள் மற்றும் குறைவான பரிவர்த்தனை செய்பவர்கள்:
எளிமையான விவரங்கள் அல்லது குறைவான ஆபத்து கொண்ட வாடிக்கையாளர்கள் தங்களது KYC புதுப்பிக்கும் வரையில் அவர்கள் வங்கி பரிவர்த்தனையை மேற்கொள்ள அனுமதிக்கின்றன. பூர்த்தி செய்யப்படாத KYCக்கு வாடிக்கையாளர்கள் அவர்களது KYCஐ பூர்த்தி செய்யும் வரையில் சாதாரண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கலாம். கடைசி தேதி ஆன ஒரு வருடத்திற்கு பிறகு அல்லது ஜூன் 30 2026 வரையில் வாடிக்கையாளர் KYC புதுப்பிக்க முடியும்.