Gold Price Today: தங்கம் விலை அதிரடி சரிவு! நகை கடைக்கு போங்க! அள்ளிக்கிட்டு வாங்க!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை குறைந்து விலையும் சரிந்து வருகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

குறையும் தங்கம் விலை
சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 27) சவரனுக்கு ரூ 680 குறைந்துள்ளதால் பொதுமக்கள் நகை கடையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவை குறைந்ததால் விலை சரிவு
இஸ்ரேல் ஈரான் போர் பதற்றம் அமெரிக்க தலையீட்டால் காணாமல் போன நிலையில் முதலீட்டாளர்கள் இன்னும் சகஜநிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கத்தின் தேவை குறைந்து அதன் விலை குறைந்து வருகிறது. மேலும் சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் தங்கத்தில் செய்த முதலீடுகளை வெளியே எடுத்து மாற்று திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளதும் தங்கம் விலை குறைய காரணம் என்று தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜுலானி தெரிவித்துள்ளார்.
சவரனுக்கு ரூ.680 சரிவு
கடந்த மே மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 15 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.68,880-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 8ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,040 க்கு விற்பனையாகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த மாதம் அது போன்று எதுவும் நடக்கவில்லை.ஜூன் 27 ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ 680 குறைந்து ஒரு கிராம் ரூ 8,985-க்கும் ஒரு சவரன் ரூ 71,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுதான் இன்றைய வெள்ளி விலை
அதேபோல் வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் 1 கிராம் 120 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1,20,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வெள்ளியில் முதலீடு செய்து பொதுமக்கள் லாபம ஈட்டலாம் என்றும் வெள்ளியில் முதலீடு செய்ய இது சரியான நேரம் என்றும் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்க நாணயங்களில் முதலீடு செய்யும் தருணம் இது
தங்கம் விலை தொடர்ந்து குறைவதால், வாடிக்கையாளர்கள் இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம் என்று எண்ணுகிறார்கள் எனவும் ஆனால் இதே போல பலரின் எதிர்பார்ப்பு இன்னும் சில நாட்களில் விலை மேலும் குறையக்கூடும் என்பதாகவே உள்ளது என்றும் நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.தங்க நாணயங்களில் முதலீடு செய்யும் தருணம் இது. நேரடி நகை வாங்கும்போது கூடுதல் கட்டணங்கள் செலவாகும். ஆனால் தங்க நாணயங்கள் அல்லது ETF-கள் இவற்றில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.
விலை சரிவுக்கான காரணம்
நிபுணர்கள் சிலர் அதற்கான சாத்தியம் இருப்பதாகக் கூறுகிறார்கள். வட்டி விகிதம் உயர்வும், சர்வதேச பொருளாதார நெருக்கடியும் இணைந்து, தங்கத்தின் மீதான தேவை குறைய வாய்ப்பு இருக்கிறது. தங்கத்தின் விலை குறைவது ஒரு சைக்கிளாகவே உள்ளது என்றும் தற்போது நடைபெறும் சரிவானது பன்னாட்டு வட்டி விகிதங்கள், பணவீக்கம் மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் இது ஒரு நெடுங்கால பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலு் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படியும் செய்யலாம் தெரியுமா?
திருமணங்கள், வைபவங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் தற்போது நிதானமாக வாங்க ஆரம்பிக்கலாம்.விலை மேலும் குறையக்கூடிய சாத்தியம் இருப்பதால், முழுமையான கொள்முதல் தவிர்த்து, பகுதியாக வாங்குவது நன்மை தரும்.பரிசுத்த திட்டங்களை தவிர்த்து நேரடி கொள்முதல் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.தங்கம் விலை தற்போது சரிவில் இருப்பது உண்மை. பொதுமக்கள் அதிரடி முடிவுகள் எடுக்காமல், சந்தையை அவதானித்து, திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். விலை மீண்டும் உயரக்கூடிய சாத்தியமும் உள்ளது. எனவே இப்போதைய விலை சரிவை புத்திசாலித்தனமான பயன்படுத்தி லாபம் ஈட்டலாம்.
கடந்த வாரம் என்ன விலை தெரியுமா?
27.06.2025- ஒரு சவரன் ரூ.71,880
26.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
25.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
24.06.2025- ஒரு சவரன் ரூ.73,240
23.06.2025- ஒரு சவரன் ரூ.73,840
22.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
21.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
20.06.2025- ஒரு சவரன் ரூ.73,680