Gold Price Today: மீண்டும் செம லக்! 3 நாட்களுக்கு பிறகு மேலும் குறைந்த தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 9,050 ரூபாய்க்கும், சவரன் 440 ரூபாய் குறைந்து 72,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
மீண்டும் சரிவை நோக்கி தங்கம்
இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து கவனம் ஈர்க்கும் அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட தங்க விலை இன்று சிறிது வீழ்ச்சி கண்டுள்ளது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்
இதன்மூலம் ஒரு கிராம் தங்கம் தற்போதைய விலை 9,050 ரூபாய் ஆக உள்ளது. கடந்த வாரம் இது சுமார் 9,105 ரூபாய்க்கு விற்பனை ஆனது என்பதை நினைவில் கொள்ளலாம்.
ஒரு சவரன் விலை இதுதான்!
சவரன் (8 கிராம்) விலையும் கணிசமாக குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் விலை 72,840 ரூபாய் இருந்த நிலையில், இன்று 440 ரூபாய் குறைந்து 72,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகை விரும்பிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் சிறிய ஊக்கம் ஏற்படுத்தி இருக்கிறது.
துள்ளி குதிக்கும் இல்லத்தரசிகள்
தங்க விலை குறைந்ததை முதலீடு செய்யும் சந்தர்ப்பமாக சிலர் எடுத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக திருமண பருவம் தொடங்கும் காலத்தில் இந்த விலை வீழ்ச்சி வாடிக்கையாளர்களுக்கு சலுகையாக அமையும்
வெள்ளி விலையும் சரிவு
வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக 121 ரூபாய் அளவில் நிலைத்திருந்த வெள்ளியின் விலை, இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியில் முதலீடு செய்யலாம்
இந்த குறைவு மிகப்பெரிய மாற்றமாக இல்லையெனினும், அன்றாட பயன்பாட்டு வெள்ளி பொருட்கள், பரிசு பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கு சாதகமான சூழலாக இருக்கும். தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை சரிவுக்கு பன்முக காரணங்கள் சொல்லப்படுகின்றன. சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு, உலகின் முக்கிய பொருள் சந்தைகளில் ஏற்பட்ட நிலைமாற்றங்கள், முதலீட்டாளர்களின் நம்பிக்கை உள்ளிட்டவை விலை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
விலை மேலும் இறங்க வாய்ப்பு
தங்க, வெள்ளி விலை தொடர்ந்து கீழே செல்வதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்றாலும், நிபுணர்கள் விலை மேலேறும் சாத்தியமும் இருக்கும் என்றும் கூறுகின்றனர். விலை குறைந்திருக்கும்போது முதலீடு செய்வது நல்ல தீர்வாக இருக்கலாம் என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் முதலீட்டுக்கு முன்பு சந்தை நிலையை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.