- Home
- Business
- மாத இறுதியில் கூட கருணை காட்டாத தங்கம், வெள்ளி? இன்று சவரன் ரூ.4,800 குறைவு.. குஷியில் நகைப்பிரியர்கள்
மாத இறுதியில் கூட கருணை காட்டாத தங்கம், வெள்ளி? இன்று சவரன் ரூ.4,800 குறைவு.. குஷியில் நகைப்பிரியர்கள்
தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இன்று விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க-ஈரான் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நகை வாங்குபவர்கள் அதிர்ச்சி
தங்கம், வெள்ளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு போட்டா போட்டிக் கொண்டு தற்போது வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், நகை வாங்குவோர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு சவரனுக்கு ரூ.9,520யும், ஒரு கிலோ வெள்ளி ரூ.25,000 அதிகரித்த நிலையில் இன்று விலை குறைந்ததா? உயர்ந்ததா? என்பதை பார்க்கலாம்.
நேற்று ரூ.10,000 உயர்வு
நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ஒரு கிராம் ரூ.16,800க்கும், சவரனுக்கு ரூ9.520ஐ உயர்ந்து ரூ.1,34,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இன்றைய நிலவரம் என்ன?
இந்நிலையில் இன்றைய (ஜனவரி 30) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.18,327ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.146,616ஆக விற்பனை செய்ய்படுகிறது.
வெள்ளி நிலவரம்
தொடர்ந்து வெள்ளி விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.415க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.415,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணமா?
தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம், ஈரானை நோக்கி அமெரிக்காவின் போர்க்கப்பல் சென்று கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டால் இன்னும் பெரிய அளவில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். போர் ஏற்பட்டால் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை நோக்கி செல்லும். ஆகையால் அமெரிக்கா டாலரில் முதலீடு செய்யாமல், தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. இனி தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் விளக்கமளித்துள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

