- Home
- Business
- FASTag அபராதம் இவ்ளோ குறையுதா.?! மத்திய அரசின் புதிய நடைமுறை.! துள்ளிக்குதிக்கும் வாகன ஓட்டிகள்.!
FASTag அபராதம் இவ்ளோ குறையுதா.?! மத்திய அரசின் புதிய நடைமுறை.! துள்ளிக்குதிக்கும் வாகன ஓட்டிகள்.!
ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்ட இரட்டை கட்டண முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும் புதிய விதியின்படி, வாகன ஓட்டிகள் யு.பி.ஐ மூலம் 1.25 மடங்கு கட்டணம் செலுத்தினால் போதுமானது.

இரட்டை கட்டணத்தால் அவதி.!
பணத்தை டிஜிட்டல் முறையில் வசூலிக்கவே ஃபாஸ்ட் டேக் நடைமுறை 2021 முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. அப்போது முதல், ஃபாஸ்ட் டேக் இல்லாதவர்கள் அல்லது காலாவதியான ஃபாஸ்ட் டேக் வைத்திருப்பவர்கள், சுங்கச்சாவடிகளில் இரட்டை கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது.
2 மடங்கு கட்டணம் வசூல்.!
உதாரணத்திற்கு, ஒரு சுங்கச்சாவடியில் ஃபாஸ்ட் டேக் வாகனத்துக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது இல்லாத வாகனம் ரூ.200 செலுத்த வேண்டியது கட்டாயமாக இருந்தது. இதனால் பலர் சிரமத்தையும், அதிக செலவையும் சந்தித்து வந்தனர்.
குறையும் கட்டணம்.!
இப்போது, இந்த நடைமுறையை மாற்றி புதிய தீர்வை அறிவித்துள்ளது மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம். அதன் படி, இனிமேல் ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் அல்லது செல்லாத ஃபாஸ்ட் டேக் வைத்திருப்பவர்கள், சுங்கச்சாவடியில் யு.பி.ஐ மூலம் கட்டணம் செலுத்தினால் 1.25 மடங்கு தொகை மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானது. அதாவது, முன்பு ரூ.200 செலுத்த வேண்டிய இடத்தில், இனிமேல் ரூ.125 மட்டுமே செலுத்தினால் போதும்.
நவம்பர் 15-ஆம் தேதி முதல் அமல்.!
இந்த புதிய நடைமுறை வருகிற நவம்பர் 15-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணிக்கவும், அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.