MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • FASTag வருடாந்திர பாஸ் எடுத்தால் இவ்ளோ சேமிப்பா.?! கணக்கு பார்த்தால் மயக்கமே வரும்.! எடுத்து வைத்தாஸ் ஸ்கூஸ் பீஸே கட்டலாம்.!

FASTag வருடாந்திர பாஸ் எடுத்தால் இவ்ளோ சேமிப்பா.?! கணக்கு பார்த்தால் மயக்கமே வரும்.! எடுத்து வைத்தாஸ் ஸ்கூஸ் பீஸே கட்டலாம்.!

அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு டோல் கட்டணச் சுமையைக் குறைக்க FASTag வருடாந்திர பாஸ் சிறந்த தீர்வாக உள்ளது. வருடத்திற்கு ₹3,000 செலவில் வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ளும் வசதியுடன், நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.

3 Min read
Vedarethinam Ramalingam
Published : Aug 21 2025, 09:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
டோல் செலவு கட்டுக்குள்.!
Image Credit : stockPhoto

டோல் செலவு கட்டுக்குள்.!

இன்றைய காலத்தில் சாலைப்பயணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. குறிப்பாக ஊருக்கு அடிக்கடி போகிறவர்களுக்கு டோல் கேட் செலவு பெரும் சுமையாகவே இருக்கும். ஒவ்வொரு பயணத்திலும் டோல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், வருடாந்திர அளவில் கணக்கிட்டால் அது பல ஆயிரங்களைத் தாண்டும். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக FasTAG வருடாந்திர பாஸ் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

28
நேரத்தை சேமித்து கொடுக்கும் FasTAG
Image Credit : Google

நேரத்தை சேமித்து கொடுக்கும் FasTAG

FasTAG என்றால் என்ன? சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகப்படுத்திய இந்த தொழில்நுட்பத்தில், உங்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படும் RFID ஸ்டிக்கர் மூலம் டோல் கேட்களில் பணம் தானாகக் கழிக்கப்படும். இதனால் நீண்ட வரிசையில் நிற்பதும், சில்லறை தேடுவதும், நேரத்தை வீணாக்குவதும் தவிர்க்கப்படுகின்றன.

Related Articles

Related image1
FASTag ரீசார்ஜ் செய்வது செம ஈசி.! Google Pay, Paytm, PhonePe இருந்தா போதும்.! இரண்டே நிமிஷத்தில் முடிச்சிடலாம்!
Related image2
ரூ.3,000-க்கு 200 பயணங்கள் இலவசம்.. FASTag ஆண்டு பாஸ்-ஐ எப்படி பெறுவது?
38
வருடாந்திர பாஸ் சலுகை
Image Credit : Asianet News

வருடாந்திர பாஸ் சலுகை

சில டோல் பிளாசாக்கள் தற்போது வருடாந்திர பாஸ் வசதியை வழங்குகின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட பாதையில் அடிக்கடி செல்லும் பயணிகள், மாதாந்திரம் அல்லது வருடாந்திர கட்டணம் செலுத்தி, வரம்பற்ற பயணத்தை மேற்கொள்ளலாம். உதாரணமாக சென்னை – திருச்சி, சென்னை – மதுரை, கோயம்புத்தூர் – சேலம் போன்ற தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக பயணிகள் உள்ளதால் இந்த வசதி அதிகம் பயன்படுகிறது.

48
வணிகர்களுக்கு இவ்ளோ மிச்சம்
Image Credit : Asianet News

வணிகர்களுக்கு இவ்ளோ மிச்சம்

இந்திய சாலை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ள FASTag Annual Pass சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் முக்கிய நோக்கம் – அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு டோல் கட்டணங்களில் பெரும் சேமிப்பு அளிப்பது. தற்போது இந்த பாஸ் கட்டணம் வருடத்திற்கு ₹3,000. இது ஒரே நெடுஞ்சாலையில் அதிகபட்சம் 200 பயணங்களுக்கு பொருந்தும். அதாவது நீங்கள் ஒரு வருடத்துக்குள் 200 முறை அந்த பாதையில் பயணம் செய்துவிட்டால், உங்கள் பாஸ் காலாவதியாகும். 

பெங்களூரு செல்ல ஆகும் டோல் செலவு

சென்னை – பெங்களூரு பயணத்தை எடுத்துக்கொண்டால், தற்போது ஒரு வழி டோல் கட்டணம் ₹230 முதல் ₹475 வரை இருக்கும். குறைந்தபட்ச பாதையைப் பயன்படுத்தினால் ₹230, அதிவேக எக்ஸ்பிரஸ்வே வழியாக சென்றால் ₹475 வரை செலவாகும். இதன் பொருட்டு ஒரு இரு வழி பயணம் (சென்று – திரும்பி) ₹460 முதல் ₹950 வரை இருக்கும்.

வணிகர்களுக்கு இவ்ளோ மிச்சம்

ஒரு வருடத்தில் நீங்கள் 200 பயணங்கள் மேற்கொண்டால் (சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் வணிகர்கள், லாரி/கேப் டிரைவர்கள், அடிக்கடி பயணம் செய்பவர்கள்), நீங்கள் கட்ட வேண்டிய தொகை சுமார் ₹46,000 முதல் ₹95,000 வரை இருக்கும். ஆனால் FASTag Annual Pass மூலம் அதே பயணங்களுக்கு வெறும் ₹3,000 மட்டும் போதும். இதன் மூலம் குறைந்தபட்சம் ₹43,000 முதல் ₹92,000 வரை சேமிக்க முடியும்.

58
அடித்தட்டு மக்களுக்கு இவ்ளோ சேமிப்பு.!
Image Credit : India Today

அடித்தட்டு மக்களுக்கு இவ்ளோ சேமிப்பு.!

ஒரு குடும்பம் மாதத்திற்கு 4 முறை ஊருக்குப் போகிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சுற்றுப் பயணத்திலும் டோல் கட்டணம் சராசரியாக ரூ.1,500 ஆகும். வருடம் முழுவதும் பார்த்தால், ரூ.18,000 – ரூ.20,000 வரை டோல் செலவாகும். ஆனால் வருடாந்திர FasTAG பாஸ் எடுத்தால், ஒரே முறையில் ஒரு நிலையான தொகையை செலுத்திவிட்டால் போதும். இப்படி பார்த்தால், வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை சேமிக்க முடியும்.

68
யாருக்கு அதிக பயன்?
Image Credit : AI Generated Image

யாருக்கு அதிக பயன்?

  • அடிக்கடி ஊருக்கு போகும் குடும்பங்களுக்கு
  • வணிக பயணிகள், சப்ளையர்கள்
  • தினசரி கம்யூட் செய்யும் அலுவலக ஊழியர்கள் இவர்களுக்கு இந்த வருடாந்திர பாஸ் முற்றிலும் ஒரு மிட்டாய் சலுகை போல இருக்கும்.
78
பாஸ் எடுப்போம்.! பாஸ் ஆவோம்.!
Image Credit : AI Generated Image

பாஸ் எடுப்போம்.! பாஸ் ஆவோம்.!

சிலர் “FasTAG வருடாந்திர பாஸ் எடுத்து வைக்கலாமா?” என யோசித்து கொண்டிருப்பார்கள். ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தால், இது ஒரு நல்ல முதலீடு போலத் தான் தெரிகிறது. போக்குவரத்து செலவை குறைத்து, நேரத்தையும் சேமிக்கிறது. அடிக்கடி ஊருக்கு போகும் பயணிகள், “ஸ்வீட் எடுத்து கொண்டாடலாம்” என்று சொல்வதற்கேற்ற வசதி இது தான்.

88
நேரமும் பணமும் மிச்சம்.!
Image Credit : AI Generated Image

நேரமும் பணமும் மிச்சம்.!

அடிக்கடி ஒரே பாதையில் பயணம் செய்பவர்களுக்கு இந்த FASTag பாஸ் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் இந்த திட்டம், வணிக நோக்கில் பயணம் செய்பவர்களுக்கும், தினசரி வேலைக்காக அலைபவர்களுக்கும் சிறந்த உதவியாக அமையும். பொதுவாக, டோல் பிளாசாக்களில் நின்று நேரத்தை வீணடிக்கும் நிலையும் தவிர்க்கப்படும். ₹3,000 செலவில் பல ஆயிரம் ரூபாய் சேமிக்கும் வாய்ப்பு என்பதால், இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஃபாஸ்டேக்
ஃபாஸ்டேக் புதிய விதிகள்
ஃபாஸ்டேக் விதிகள்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved