உங்கள் பொருட்களை டிமார்ட் கடைகளில் விற்கலாம்.. எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
டிமார்ட் கடைகளில் உங்கள் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் உங்கள் வியாபாரத்தை வளர்த்துக் கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு ஆகும். உங்கள் பொருட்களை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

டிமார்ட் விற்பனை
சில்லறை வணிகத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற டிமார்ட் கடைகள், தற்போது இந்தியாவின் பல நகரங்களில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கின்றன என்பதாலேயே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆனால், வாடிக்கையாளர்கள் போலவே, சிறு தொழில் அதிபர்களுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி உண்டு. நீங்கள் தயாரிக்கும் பொருட்களை நேரடியாக டிமார்ட் கடைகளில் விற்பனை செய்யலாம்.
டிமார்ட்
டிமார்ட் தனது அனைத்து கடைகளிலும் உணவு, வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை, ஆடைகள் என பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதனால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் அல்லது சிறு வியாபாரிகள் தங்கள் பிராண்டை வளர்க்கும் வாய்ப்பு பெறுகிறார்கள். உதாரணமாக, நீங்கள் மசாலா, பாக்கெட் உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் உபயோகப் பொருட்கள், டீ-ஷர்ட்கள் அல்லது தினசரி பயன்படுத்தும் பொருட்களை தயாரித்து வந்தால், டிமார்ட் உங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் சேர்க்க உதவும்.
டிமார்ட் நிறுவனம்
அதற்காக, முதலில் டிமார்ட் நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் விற்பனைக்கான விதிமுறைகள், தரச் சான்றிதழ், பேக்கேஜிங் தரம், விலை விவரம் ஆகியவற்றைக் கேட்டறிவார்கள். தரநிலைக்கு ஏற்ப இருந்தால், உங்கள் பொருட்களை டிமார்ட் கிளைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இது உங்கள் வியாபாரத்தை மாநிலம் முழுவதும், அடுத்த கட்டமாக நாடு முழுவதும் விரிவாக்க உதவும்.
டிமார்ட் விற்பனை வழிகாட்டி
டிமார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் நம்பகமான, தரமான, குறைந்த விலை பொருட்களை வழங்க விரும்புகிறது. எனவே, விற்பனையாளர்களிடமும் அவர்கள் அதே தரநிலையை எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, உணவு மற்றும் மளிகை பொருட்கள் தரம் மிக முக்கியம். தரச் சான்றிதழ்கள் இல்லாமல், டிமார்ட் பொருட்களை ஏற்றுக்கொள்ளாது. இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காக்கும் முயற்சி ஆகும்.
டிமார்ட் வாய்ப்பு
சிறு தொழில் அதிபர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. சாதாரண கடைகள் அல்லது ஆன்லைன் மார்க்கெட்டில் போட்டியிட சிரமம் இருக்கும் நிலையில், டிமார்ட் போன்ற பெரிய சில்லறை சங்கிலி உங்களுக்கு பொருட்களுக்கு உறுதியான சந்தையை உருவாக்கிவிடும். உங்கள் பொருட்கள் வாடிக்கையாளர்களிடம் செல்லும். அதனால், உங்கள் வியாபாரத்தை வளர்க்க நினைத்தால், டிமார்ட் போன்ற பெரிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது சிறந்த தீர்வாக இருக்கும். தரம், விலை, நம்பிக்கை ஆகியவற்றை பேணினால், நீங்களும் விரைவில் ஒரு பிரபலமான வியாபாரியாக மாறலாம்.