ரயில் டிக்கெட் இனி கன்ஃபார்ம்.. ரயில் பயணிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
ஒரு டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாத பட்சத்தில், மற்றொன்றில் பயணிக்க இந்த வசதி உதவுகிறது. இந்த ஆன்லைன் புக்கிங் அம்சம், குறிப்பாக பண்டிகை காலங்களில் பயணிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

ரயில் டிக்கெட்
இந்திய ரயில்வே, பயணிகளுக்கு அதிக வசதி வழங்கும் நோக்கில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஐஆர்சிடிசி நிறுவனம், ஒரே பயணத்திற்கு இரண்டு ரயில் டிக்கெட் புக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதி மூலம் பயணிகளுக்கு அதிக சுதந்திரம் கிடைக்கும்.
இரட்டை டிக்கெட் புக்கிங்
முன்பு, ஒரே பயணத்திற்கான இரட்டை டிக்கெட் புக்கிங் செய்ய அனுமதி இல்லை. ஆனால் தற்போது புதிய விதியின் மூலம், பயணிகள் இரண்டு வேறு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதனால் ஒரு டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை என்றாலும், மறுபடியும் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும்.
ரயில்வே விதிகள்
உதாரணமாக, ஒருவர் சென்னையிலிருந்து டெல்லி செல்ல விரும்பினால், ஒரே நேரத்தில் இரண்டு ரயில்களில் டிக்கெட் புக் செய்யலாம். எந்த ரயிலில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிறதோ, அதில் பயணம் செய்யலாம். மற்ற டிக்கெட் தானாகவே கேன்சல் ஆகிவிடும்.
கன்ஃபார்ம் டிக்கெட்
ஐஆர்சிடிசி இந்த வசதியை ஆன்லைன் புக்கிங்கில் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பண்டிகை, சீசன் காலங்களில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் சிரமப்படும் பயணிகளுக்கு இது பெரும் நன்மையாக இருக்கும். பயணிகள் கூடுதல் மனஅழுத்தம் இல்லாமல் முன்பதிவு செய்யலாம்.
இந்தியன் ரயில்வே
இந்த விதி ரயில்வே பயணிகளின் சிரமத்தை குறைப்பதோடு, சேவையை மேம்படுத்தும். இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். அதனால், இந்த புதிய விதி, அனைவருக்கும் பயணத்தை எளிதாக்கும் முக்கியமான மாற்றமாக இருக்கும்.