MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னைவாசிகள் கவனத்துக்கு..! புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்..! நோட் பண்ணிக்கோங்க!

சென்னைவாசிகள் கவனத்துக்கு..! புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்..! நோட் பண்ணிக்கோங்க!

சென்னை புறநகர் ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 07 2025, 08:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்
Image Credit : Google

சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில் கடற்கரை‍‍-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை‍-வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் கைகொடுத்து வருகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை இருந்தாலும் புறநகர் ரயில்கள் மிகவும் குறைவான கட்டணத்தில் சேவையை வழங்கி வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
Image Credit : Indian Railway

புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில்களால் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி பணிமனையில் இன்று (செப்டம்பர் 7) இரவு 8 மணி முதல் நாளை (செப்டம்பர் 8) அதிகாலை 4 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி

சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6.45, இரவு 8, 9.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று இரவு 7.35, 8.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

34
மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி
Image Credit : Indian Rail info

மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி

இதேபோல் சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 7.35, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று இரவு 8.15, 9.25, 10.30 ஆகிய மணி நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் சூலூர்பேட்டையில் இருந்து இன்று இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

44
சிறப்பு ரயில்கள் இயக்கம்
Image Credit : our own

சிறப்பு ரயில்கள் இயக்கம்

புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பய உள்ளன. அதாவது சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6.45, இரவு 9.20 மணிக்கு மீஞ்சூருக்கு சிறப்பு ரயில்களும், மீஞ்சூரில் இருந்து இரவு 8.04 மணிக்கு சென்னை கடற்கரைக்கும் சிறப்பு மின்சார ரயில்களும் இயக்கப்பட உள்ளன. மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 7.35 மணிக்கு மீஞ்சூருக்கும், மீஞ்சூரில் இருந்து இரவு 8.44, 9.56 மணிக்கு மூர்மார்க்கெட்டிற்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் சூலூர்பேட்டையில் இருந்து இன்று இரவு 8.35 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை
ரயில்
தென்னக இரயில்வே
தமிழ்நாடு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Recommended image2
Now Playing
மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
Recommended image3
Now Playing
டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
Related Stories
Recommended image1
சென்னை டூ டெல்லி இனி 26 மணி நேரம் தான்! 'ஜெட்' வேகத்தில் பாயப்போகும் வந்தே பாரத் ரயில்!
Recommended image2
கோவை மக்களுக்கு குட்நியூஸ்! மெட்ரோ ரயில் முதலில் எந்த ரூட்டில் ஓடப்போகுது? புது அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved