தங்க விலை ஏறிக் கொண்டிருக்க.. மரங்களில் தங்கம் கண்டுபிடிப்பு - இதாங்க ஹாட் டாபிக்
தங்க விலை உயர்வால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் கவனத்தை திருப்பியுள்ள நிலையில், விஞ்ஞானிகள் மரங்களில் தங்க துகள்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த டாபிக் தற்போது வைரலாகி வருகிறது.

மரங்களில் தங்கம்
மரங்களில் தங்கம் காய்க்காது. ஆனால் பின்லாந்து ஆய்வு, மரங்களுக்கும் தங்கத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது. வடக்கு பின்லாந்தில் உள்ள நார்வே ஸ்ப்ரூஸ் மரங்களில் தங்க நானோ துகள்கள் கிடைத்துள்ளன. நார்வே ஸ்ப்ரூஸ் மரங்களின் ஊசி போன்ற இலைகளில் ஒருவகை நுண்ணுயிரிகள் வாழ்கின்றன.
தங்கம் கண்டுபிடிப்பு
அவை தங்கள் செயல்பாடுகள் மூலம் தங்கத் துகள்களை உற்பத்தி செய்வதை பின்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மண்ணில் உள்ள தங்கம், நீரின் மூலம் மரத்தின் இலைகளை அடைகிறது. அங்குள்ள பாக்டீரியாக்கள், அதனை தங்க நானோ துகள்களாக மாற்ற உதவுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவே இலைகளில் தங்கம் சேர காரணம்.
மரத்தில் தங்கம்
தற்போது நடந்துள்ள ஆய்வு முதன்மையானது. மண்ணில் உள்ள தங்கம் இலைகளில் எப்படி சேர்கிறது என்பது குறித்து ஆழமான ஆய்வுகள் தேவை. மரங்களில் தங்கம் கிடைத்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞான ஆய்வு
பொதுவாக, தங்கம் எடுக்க துளையிடுதல் போன்ற முறைகள் பயன்படும். ஆனால் இந்த ஆய்வில், நுண்ணுயிரிகளுக்கும் தங்கத்திற்கும் உள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ளது. இதை புரிந்துகொள்வதன் மூலம் தங்கம் இருப்பதை கண்டறியலாம்.