1 நாளைக்கு பண லிமிட் இவ்ளோ தான்.. மீறினால் எவ்வளவு அபராதம் தெரியுமா?
ஒரே நாளில் இந்த லிமிட்டுக்கு மேல் பணம் பரிமாற்றம் செய்வது சட்டவிரோதமாகும். பிரிவு 269ST படி, இதை மீறினால் வருமான வரித்துறை முழு தொகையை அபராதமாக வசூலிக்கலாம்.

தினசரி பணம் லிமிட்
இந்திய வருமான வரித்துறை பண பரிவர்த்தனைகளை மிகவும் கவனமாக கண்காணிக்கிறது. ஒரே நாளில் ரூ.2 லட்சத்தை விட அதிக பணம் பரிமாற்றினால், உங்களிடம் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம். வருமான வரித்துறை சட்டம் பிரிவு 269ST படி, நீங்கள் பெற்ற பணத்தின் முழு தொகையையும் அபராதமாக வசூலிக்கக் கூடும்.
வருமான வரித்துறை
இன்றைய காலத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், பண பரிவர்த்தனைகள் மீது அரசு மற்றும் வருமான வரித்துறை நெருக்கமாக கவனம் செலுத்துகிறது செலுத்துகிறது. இதன் நோக்கம் கருப்பு பணம் மற்றும் வரிவிலக்கு முயற்சிகளைத் தடுப்பது ஆகும்.
பண பரிவர்த்தனைகள்
பணம் பரிமாற்றத்தில் அதிக தொகையை பெறுவது சில நேரங்களில் சட்டத்தை மீறும் அபாயம் உண்டாகும். அதனால், பண லிமிட் எவ்வளவு என்பதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். ஒரே நாளில் ஒருவரிடமிருந்து ரூ.2 லட்சத்தை அதிகமாகப் பெறுவது சட்டவிரோதமாகும். இது பரிசு, கடன், வணிகச் செலுத்துதல் அல்லது மற்ற எந்த பரிவர்த்தனையிலும் பொருந்தும்.
அபராதம்
உதாரணமாக, நீங்கள் ஒருவரிடமிருந்து ரூ.3 லட்சம் பணம் பெற்றால், வருமான வரித்துறை அதை பறித்து அபராதம் விதிக்கலாம். உங்கள் வங்கி கணக்கு, வணிகச் செலுத்தல்கள், கடன், பரிசுகள் போன்ற பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன.
முக்கிய பரிவர்த்தனை
வருமான வரித்துறை கண்காணிக்கும் முக்கிய பரிவர்த்தனைகள் பின்வருமாறு, ஒரு ஆண்டில் ரூ.10 லட்சம் மேல் வங்கி டெபாசிட், ரூ.1 லட்சம் மேல் கிரெடிட் கார்டு செலுத்துதல், ரூ.30 லட்சம் மேல் சொத்துப் பரிவர்த்தனை, ரூ.50,000 மேல் பரிசு, வணிகச் செலுத்தினால் ரூ.2 லட்சம் ஆகும்.
வருமான வரி நோட்டீஸ்
இதைத் தவிர்க்க, பெரிய பண பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்யுங்கள், கட்டணங்கள் மற்றும் ரசீது காப்பியுங்கள், பரிசு அல்லது கடன் பரிவர்த்தனையை எழுதப்பட்ட வடிவில் வைத்திருங்கள். வணிகர்கள் மற்றும் வங்கி நிறுவனங்களும் வரம்பை மீறக்கூடாது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை பொருத்தமாக பயன்படுத்துவதால் பணம் பாதுகாப்பாகவும், அபராதத்தையும், வருமான வரி நோட்டீஸையும் தவிர்க்கலாம்.