MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 6 Days Bank Holiday: 6 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.! மக்களே உஷார்.! எந்தெந்த தேதிகளில் தெரியுமா?

6 Days Bank Holiday: 6 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.! மக்களே உஷார்.! எந்தெந்த தேதிகளில் தெரியுமா?

6 Days Bank Holiday: எஸ்பிஐ ஊழியர்களின் வேலைநிறுத்தம், வார இறுதி மற்றும் பக்ரீத் பண்டிகை காரணமாக சில பகுதிகளில் வங்கிகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்பட உள்ளன. இதனால் கிளை வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.

2 Min read
Author : Raghupati R
Published : May 22 2026, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
6 நாட்கள் வங்கிகள் மூடப்படும்
Image Credit : Asianet News

6 நாட்கள் வங்கிகள் மூடப்படும்

வங்கி தொடர்பான வேலைகளை திட்டமிட்டு செய்து வருபவர்களுக்கு தற்போது முக்கிய எச்சரிக்கை வெளியாகியுள்ளது. எஸ்பிஐ ஊழியர்கள் அறிவித்துள்ள இரண்டு நாள் வேலைநிறுத்தம், வார இறுதி விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகை காரணமாக சில பகுதிகளில் வங்கிகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படவுள்ளன. இதனால் கிளை வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 23 மற்றும் 24 தேதிகளில் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு காரணமாக வங்கிகள் இயங்காது.

Free Aadhaar Update : ரூ.75 செலவில்லாமல் ஆதாரை அப்டேட் செய்யலாம்.. மக்களுக்கு வந்த பெரிய குட் நியூஸ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Image Credit : getty

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இதனைத் தொடர்ந்து மே 25 மற்றும் 26 தேதிகளில் எஸ்பிஐ ஊழியர் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வேலைநிறுத்த ஆட்சேர்ப்பு கொள்கை, அவுட்சோர்சிங் வேலைகள், பதவி உயர்வு பிரச்சினைகள் மற்றும் ஓய்வூதிய நிதி மேலாளர் தேர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை மையமாக கொண்டு நடைபெறுகிறது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் கிளை செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதன் பிறகு மே 27 மற்றும் 28 தேதிகளில் பக்ரீத் பண்டிகை விடுமுறை சில மாநிலங்களில் அமலுக்கு வரும்.

Related Articles

Related image1
RBI: ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு இருந்தால் ரூ.10,000 அபராதம்? ஆர்பிஐ ரூல்ஸ் சொல்வது என்ன?
Related image2
Training: வீட்டில் இருந்தே தினமும் ரூ.5000 சம்பாதிக்கலாம் ஈசியா.! உங்கள் வாழ்க்கையை மாற்றும் 3 நாள் அரசு பயிற்சி வகுப்பு.!
34
வங்கி சேவை பாதிப்பு
Image Credit : Gemini

வங்கி சேவை பாதிப்பு

குறிப்பாக ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்கள் விடுமுறை காரணமாக வங்கிகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள எஸ்பிஐ கிளை சேவைகள் முழுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த காலத்தில் ஏடிஎம், யுபிஐ, மொபைல் பேங்கிங் மற்றும் நெட் பேங்கிங் சேவைகள் வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிளைக்கு நேரடியாக சென்று செய்ய வேண்டிய பணிகள் பாதிக்கப்படும்.

44
வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு
Image Credit : getty

வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு

குறிப்பாக பாஸ்புக் புதுப்பிப்பு, காசோலை வைப்பு, லாக்கர் அணுகல், பண வைப்பு, கடன் ஆவணம் சமர்ப்பிப்பு போன்ற சேவைகள் கிடைக்காமல் போகலாம். இதனால் வங்கி கிளைகளில் செய்ய வேண்டிய அவசர வேலைகளை முன்கூட்டியே முடித்து விடுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வங்கி வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. ஒரு சிறிய அலட்சியம் கூட பெரிய சிக்கலை உருவாக்கக்கூடும் என்பதால், வங்கி விடுமுறை நாள்காட்டி-ஐ சரிபார்த்து செயல்படுவது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி
வங்கி விடுமுறை
பாரத ஸ்டேட் வங்கி
வணிகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Train: ரயிலில் உங்கள் உடைமைகளை தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும்? திரும்ப பெறுவது எப்படி? வழிமுறைகள் இதோ.!
Recommended image2
Govt Scheme: அரசு தரும் ரூ.4,000 உதவித்தொகை... முதலில் இந்த சான்றிதழை வாங்குங்கள்!
Recommended image3
Training: சமையலில் ஆர்வமா? தினமும் ரூ.5 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! 2 நாள் பயிற்சியில் எல்லாம் சாத்தியம்!
Related Stories
Recommended image1
RBI: ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு இருந்தால் ரூ.10,000 அபராதம்? ஆர்பிஐ ரூல்ஸ் சொல்வது என்ன?
Recommended image2
Training: வீட்டில் இருந்தே தினமும் ரூ.5000 சம்பாதிக்கலாம் ஈசியா.! உங்கள் வாழ்க்கையை மாற்றும் 3 நாள் அரசு பயிற்சி வகுப்பு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved