- Home
- Business
- Training: வீட்டில் இருந்தே தினமும் ரூ.5000 சம்பாதிக்கலாம் ஈசியா.! உங்கள் வாழ்க்கையை மாற்றும் 3 நாள் அரசு பயிற்சி வகுப்பு.!
Training: வீட்டில் இருந்தே தினமும் ரூ.5000 சம்பாதிக்கலாம் ஈசியா.! உங்கள் வாழ்க்கையை மாற்றும் 3 நாள் அரசு பயிற்சி வகுப்பு.!
தமிழக அரசு EDII-TN மூலம் சென்னையில் 3 நாள் சிறப்பு தொழில்முனைவர் பயிற்சியை வழங்குகிறது. குறைந்த முதலீட்டில் வீட்டு பராமரிப்பு, ரசாயனப் பொருட்கள் தயாரித்து சுயதொழில் தொடங்குவது எப்படி என்பது குறித்து இந்த பயிற்சி முழுமையான வழிகாட்டுதலை வழங்குகிறது.

3 நாள் சிறப்பு தொழில்முனைவர் பயிற்சி
வேலை தேடி அலையும் இளைஞர்கள், வீட்டிலிருந்தே வருமானம் பெற விரும்பும் பெண்கள், புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படுபவர்கள் என அனைவருக்கும் ஒரு அரிய வாய்ப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய வீட்டு பராமரிப்பு மற்றும் ரசாயன பொருட்கள் தயாரிப்பு தொடர்பான 3 நாள் சிறப்பு தொழில்முனைவர் பயிற்சி வகுப்பு சென்னைையில் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியை Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN) நடத்துகிறது. தொழில் தொடங்குவதற்கான அடிப்படை அறிவிலிருந்து, தயாரிப்பு முறைகள், சந்தைப்படுத்தல் யுக்திகள் வரை அனைத்தும் நேரடி பயிற்சியாக கற்றுத்தரப்பட உள்ளதால் இந்த முகாமுக்கு அதிக வரவேற்பு உருவாகியுள்ளது.

வீட்டிலிருந்தே பெரிய வருமானம் பெறும் வாய்ப்பு
இன்றைய காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு சந்தையில் மிகப்பெரிய தேவை உள்ளது. குறிப்பாக டிடர்ஜென்ட், ஃப்ளோர் கிளீனர், டிஷ் வாஷ் லிக்விட், ஏர் ஃப்ரெஷ்னர் போன்ற பொருட்கள் தினசரி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களாக மாறிவிட்டன.
இந்த பொருட்களை வீட்டிலிருந்தே சிறிய அளவில் தயாரித்து விற்பனை செய்தாலும் தினசரி நல்ல வருமானம் பெற முடியும். சரியான தரம் மற்றும் குறைந்த விலையில் தயாரித்தால் அருகிலுள்ள கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஆன்லைன் மூலமாக கூட விற்பனை செய்து தொழிலை வளர்க்கலாம் என பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பயிற்சியில் என்னென்ன கற்றுத்தரப்பட உள்ளது?
இந்த 3 நாள் பயிற்சியில் பல வகையான Home Care மற்றும் Industrial Chemical பொருட்கள் தயாரிப்பு குறித்து நேரடி விளக்கங்களுடன் கற்றுத்தரப்பட உள்ளது.
Laundry Care Products
லிக்விட் டிடர்ஜென்ட் தயாரிப்பு
டிடர்ஜென்ட் பவுடர் தயாரிப்பு
ஃபேப்ரிக் சாப்ட்னர் தயாரிப்பு
Surface Care Products
மல்டி பர்பஸ் கிளீனிங் ஸ்ப்ரே
ஃப்ளோர் கிளீனர் தயாரிப்பு
கிளாஸ் கிளீனர் தயாரிப்பு
Dishwashing Products
டிஷ் வாஷ்
லிக்விட் டிஷ் வாஷ்
டேப்லெட்ஸ் ரின்ஸ் எய்ட்ஸ் தயாரிப்பு
Air Care Products
ஏரோசோல்
ஏர் ஃப்ரெஷ்னர்கள்
ப்ளக்-இன் டிஃப்யூசர்கள்
வாசனை ஜெல்கள் தயாரிப்பு
தொழில் தொடங்க தேவையான முழு வழிகாட்டுதல்
இந்த பயிற்சியில் தயாரிப்பு செய்வது மட்டுமல்லாமல்:
மூலப்பொருட்கள் எங்கு வாங்குவது? குறைந்த செலவில் தயாரிப்பது எப்படி? பேக்கேஜிங் மற்றும் லேபிள் டிசைன் செய்வது எப்படி? கடைகளில் பொருட்களை விற்பனைக்கு வைப்பது எப்படி? சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை அதிகரிப்பது எப்படி?
என்பதுபோன்ற பல முக்கிய தகவல்களும் வழங்கப்படுகின்றன.
எப்போது? எங்கு நடைபெறுகிறது?
இந்த 3 நாள் பயிற்சி வகுப்பு: மே 25 முதல் 27, 2026 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இடம்: EDII-TN Campus, பார்த்தசாரதி கோவில் தெரு, எக்காடுத்தாங்கல், சென்னை – 600032.
பயிற்சி கட்டணம் எவ்வளவு?
இந்த முழுமையான தொழில்முனைவர் பயிற்சிக்கான கட்டணம் ரூ.5000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
தொடர்புக்கு
📞 +91-9080609783 📞 +91-9360221280 📞 8668102600
info@editn.in, adldir.edii@tn.gov.in
சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற கனவு கொண்டவர்களுக்கு இந்த 3 நாள் அரசு பயிற்சி வகுப்பு வாழ்க்கையை மாற்றக்கூடிய பெரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

