- Home
- Business
- எடப்பாடி முடிவால் கடுங்கோபத்தில் அமித்ஷா.! ஓபிஎஸ், டிடிவியின் அடுத்த கட்ட திட்டம் என்ன.?
எடப்பாடி முடிவால் கடுங்கோபத்தில் அமித்ஷா.! ஓபிஎஸ், டிடிவியின் அடுத்த கட்ட திட்டம் என்ன.?
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் பிளவுகள் தோல்வியைத் தழுவி வருகின்றன. பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி விலகியிருப்பது அதிமுக- பாஜக கூட்டணிக்கு பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. எனவே ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் தோல்வி, தோல்வி தான் எனவே ஒரு வாக்குகளை கூட விடாமல் சேர்த்து வரும் நிலையில்,
அதிமுக வாக்குகளை ஒருங்கிணைப்பதில் தோல்வி அடைந்துள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிளவுகளாக பிளவுப்பட்டுள்ளது அதிமுக,
இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என தனித்தனி அணியாக உள்ளது. 4 அணிகளாக பிரிந்து கிடப்பதால் கடந்த 10 தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வி மேல் தோல்வி பரிசாக கிடைத்து வருகிறது. எனவே பிரிந்து சென்றவர்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது தான் அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எண்ணமாக உள்ளது. ஆனால் தற்போது அதிமுக பொதுச்செயராளராக உள்ள எடப்பாடி பழனிசாமியோ ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையென உறுதியாக உள்ளார்.
இந்த நிலையில் தான் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைமையிடம் கொடுத்த முக்கிய நிபந்தனையாக ஓபிஎஸ், டிடிவி மற்றும் சசிகலாவை கூட்டணியில் சேர்க்க கூடாது என்பது தான். இந்த சூழலில் தான் பாஜக கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் விரை இடம்பிடித்திருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அடுத்தடுத்து கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர்.
இதனால் மீண்டும் அதிமுகவிற்கான ஆதரவு வாக்குகள் பிரிந்துள்ளது. எனவே தேர்தல் நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி பெற வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் முடிவால் பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கடைசி நேரத்தில் கைவிட்டு சென்ற எடப்பாடியின் பேச்சை கேட்டு கூடவே நம்பி இருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவியை கழட்டி விட்டது தவறானது என பாஜகவினர் கூறி வருகிறார்கள்.
இதே கருத்தை டெல்லியில் பாஜகவினரோடு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட அமித்ஷாவும் எடப்பாடியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ளார். இந்த சூழலில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அடுத்தகட்டமாக என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவிக்கு இருக்கும் முதல் தேர்வாக தவெக உள்ளது. தற்போது திமுகவிற்கு தேர்தலில் கடும் போட்டியாக விஜய் இருப்பார் என கூறப்படுகிறது. எனவே விஜய் தலைமையிலான கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.
அல்லது தேமுதிக, ராமதாஸ் பாமகவுடன் தனி அணியாக ஓபிஎஸ், டிடிவி இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். எனவே பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகியோர் விலகி இருப்பது அதிமுக- பாஜக கூட்டணிக்கு பலத்த அடியாகவே பார்க்கப்படுகிறது.