MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மரணத்திற்குப் பிறகு ஆதார் முடக்கலையா? குடும்பத்தினர் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒரு வேலை!

மரணத்திற்குப் பிறகு ஆதார் முடக்கலையா? குடும்பத்தினர் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒரு வேலை!

ஒருவர் இறந்த பிறகு அவரது ஆதார் அட்டையை செயலிழக்கச் செய்வது மோசடிகளைத் தடுக்க அவசியமாகும். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் எளிதாக இறந்தவரின் ஆதாரை முடக்க விண்ணப்பிக்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 10 2026, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மரணத்திற்குப் பிறகு ஆதார் கார்டை என்ன செய்ய வேண்டும்?
Image Credit : UIDAI

மரணத்திற்குப் பிறகு ஆதார் கார்டை என்ன செய்ய வேண்டும்?

ஆதார் அட்டை இன்று இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அரசு நலத் திட்டங்கள், வங்கி சேவைகள், ஓய்வூதியம், மொபைல் இணைப்பு போன்ற பல விஷயங்களுக்கு ஆதார் அவசியமாகி விட்டது. ஆனால், ஒருவர் உயிரிழந்த பிறகு அவரது ஆதார் அட்டை செயலில் உள்ளது-ஆக இருந்தால், அது குடும்பத்தினருக்கு தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அதனால், அந்த நபரின் ஆதாரை உடனடியாக டீ- ஆக்டிவேட் செய்வது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

25
ஆதார் செயலிழக்கச் செய்வதன் காரணம்
Image Credit : our own

ஆதார் செயலிழக்கச் செய்வதன் காரணம்

UIDAI இதுவரை 2.5 கோடிக்கும் அதிகமான இறந்த நபர்களின் ஆதார் எண்களை முடக்கி உள்ளது. இதன் முக்கிய நோக்கம், ஆதார் தரவுத்தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது, மோசடிகளைத் தடுப்பதும்தான். ஒருவர் இறந்த பிறகும் ஆதார் செயல்பாட்டில் இருந்தால், அந்த அடையாளத்தை பயன்படுத்தி அரசு உதவித்தொகை, பென்ஷன், சப்சிடி போன்றவற்றை தவறாக அபாயம் உள்ளது. இதுவே ஆதார் செயலிழக்கச் செய்வதன் காரணமாக அரசு கூறுகிறது.

Related Articles

Related image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Related image2
ரயில் பயணிகளே உஷார்.. ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. டிக்கெட் முதல் லக்கேஜ் வரை
35
இறந்தவரின் ஆதார்
Image Credit : Gemini

இறந்தவரின் ஆதார்

இறந்த நபரின் ஆதாரை முடக்க UIDAI தற்போது ஒரு எளிய ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. myAadhaar portal-ல் “குடும்ப உறுப்பினரின் இறப்பு அறிக்கை” என்ற வசதி மூலம், குடும்ப உறுப்பினர் ஒருவர் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதனால் அலுவலகங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

45
ஆதார் அடையாள பாதுகாப்பு
Image Credit : X

ஆதார் அடையாள பாதுகாப்பு

இந்த செயல்முறைக்காக, இறந்த நபரின் ஆதார் எண், மரண பதிவு எண் (இறப்பு பதிவு எண்), பெயர், பிறந்த தேதி போன்ற அடிப்படை விவரங்களை வழங்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு UIDAI அந்த தகவல்களை சரிபார்க்கும். சரிபார்ப்பு முடிந்தது, அந்த ஆதார் எண் நிரந்தரமாக செயலிழக்கச் செய்யப்படும். முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்த சேவை குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதியை தருகிறது.

55
ஆதார் மோசடி தடுப்பு
Image Credit : Getty

ஆதார் மோசடி தடுப்பு

ஆதார் தொடர்பான மோசடிகளைத் தவிர்க்க UIDAI மேலும் சில பாதுகாப்பு வசதிகளையும் வழங்குகிறது. பயனர்கள் தங்களின் biometrics-ஐ lock செய்யலாம். இதனால் கைரேகை, கண் கருவிழி போன்றவை தவறாக பயன்படுத்தப்படாது. முக அங்கீகாரம் போன்ற வசதிகளும் உள்ளன. மொத்தத்தில், ஒருவர் இறந்த பிறகு அவரது ஆதாரை உடனடியாக செயலிழக்கச் செய்வது, குடும்பத்தின் பாதுகாப்பிற்கும், சமூகத்தின் நம்பிக்கைக்கும் மிகவும் அவசியமான ஒரு நடவடிக்கையாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆதார் அட்டை
இந்தியா
தனிநபர் நிதி
வணிகம்
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
காசு மிச்சம்.. ரயிலில் குழந்தைகளுக்கு 'இந்த' வயது வரை டிக்கெட் இலவசம்.. முழு விவரம் இதோ!
Recommended image2
EPFO அதிரடி: வீடு வாங்கவும் கடன் அடைப்பதும் ரொம்ப ஈசி..! இனி 3 நாட்களில் கைக்கு வரும் PF பணம்
Recommended image3
முதலீடு ரூ.2 லட்சம்.. லாபம் ரூ.77 ஆயிரம்! PNB வங்கியின் அதிரடி ஃபிக்சட் டெபாசிட் திட்டம்
Related Stories
Recommended image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Recommended image2
ரயில் பயணிகளே உஷார்.. ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. டிக்கெட் முதல் லக்கேஜ் வரை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved