- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- தப்பித்த டைட்டில் வின்னர்... நாமினேஷனில் கொத்தாக மாட்டிய பெரிய தலைகள் - இந்த வார பிக்பாஸ் எவிக்ஷன் லிஸ்ட் இதோ
தப்பித்த டைட்டில் வின்னர்... நாமினேஷனில் கொத்தாக மாட்டிய பெரிய தலைகள் - இந்த வார பிக்பாஸ் எவிக்ஷன் லிஸ்ட் இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் மொத்தம் 8 போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

BB Tamil 7
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி 50 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். அவர்கள் இடையே சண்டையை மூட்டிவிடும் வகையில் பல விதமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ். அந்த வகையில் இந்த வாரம் அவர் கொடுத்த டாஸ்க்கால் பிக்பாஸ் வீடே பேரதிர்ச்சியில் மூழ்கி உள்ளது. ஏனெனில் இந்த வாரம் மேலும் 3 வைல்டு கார்டு எண்ட்ரி உள்ளே வர உள்ளார்களாம்.
Bigg Boss Tamil season 7
அந்த வகையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வரும் போட்டியாளர்களுடன் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நடக்கும் போட்டியில் அவர்கள் மூவரையும் வீழ்த்தி விட்டால் பிக்பாஸ் போட்டியாளர்கள் போட்டியில் தொடரலாம். ஒருவேளை வீழ்த்த தவறிவிட்டால் வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பிவிட்டு, தோற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்துள்ளார் பிக்பாஸ்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
BiggBoss wildcard
இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாமினேட் ஆகி உள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் டஃப் ஆன போட்டியாளர்களாக இருக்கும் மாயா, அர்ச்சனா, பூர்ணிமா, விசித்ரா, மணி, ரவீனா ஆகியோர் இந்த வார நாமினேஷனில் சிக்கி உள்ளனர். இதுதவிர பிக்பாஸ் வீட்டில் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கும் போட்டியாளர்களான பிராவோ மற்றும் அக்ஷயாவும் இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ளனர்.
Bigg Boss Nomination
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் டைட்டில் வின்னர் என தன்னைத் தானே கூறிக்கொள்ளும் சரவண விக்ரம் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கவில்லை. அதேபோல் வனிதாவின் மகள் ஜோவிகா, கூல் சுரேஷ், விஷ்ணு மற்றும் நிக்சன் ஆகியோரும் இந்த வார எவிக்ஷனில் இருந்து தப்பி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... சினிமாவில் இருந்து விலகினாலும் கோடீஸ்வரியாக வாழும் ஷாலினி... அஜித் மனைவிக்கு இத்தனை கோடி சொத்துக்களா?