அடேங்கப்பா இத்தனை கோடியா..! பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் வாங்கிய சம்பள விவரம் லீக்கானது
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வாழங்கியதற்காக நடிகர் கமல்ஹாசன் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் முதன்முறையாக தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் இதுவாகும். இந்நிகழ்ச்சி தற்போது 6 சீசன்கள் நிறைவடைந்து விட்டது. இந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான்.
100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் வார இறுதியில் மட்டும் வந்து கலந்துகொண்டு, அந்த வாரம் நடந்த நிகழ்வுகள் பற்றியும், டாஸ்க்குகள் பற்றியும் போட்டியாளர்களுடன் கலந்துரையாடிவிட்டு, பின்னர் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளரை வெளியேற்றும் பொறுப்பும் கமல்ஹாசனுடையது தான்.
இதையும் படியுங்கள்... முடிகிறது பிக்பாஸ் சீசன் 6... சர்ச்சைகளும், சாதனைகளும் நிறைந்த இந்த சீசனின் முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 30 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்து உள்ளதாம். அதாவது 3 கோடி பார்வையாளர்கள். இந்த பார்வையாளர்களின் விகிதம் அதிகரிப்பதைப் போல் சீசனுக்கு சீசன் கமல்ஹாசனின் சம்பளமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக அவர் வாங்கிய சம்பள விவரம் லீக் ஆகி உள்ளது. இதற்கு முந்தைய சீசன் வரை ரூ.55 கோடி சம்பளமாக பெற்றுவந்த கமல்ஹாசன், இந்த 6-வது சீசனுக்காக ரூ.20 கோடி கூடுதலாக, அதாவது ரூ.75 கோடி சம்பளமாக பெற்று உள்ளாராம். ஒருவாரத்துக்கு ரூ.5 கோடி வீதம், மொத்தம் அவர் கலந்துகொண்ட 15 வாரத்துக்காக அவருக்கு ரூ.75 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸில் இருந்து விலகலா... அடுத்த சீசனுக்கு ‘நாயகன்’ மீண்டும் வருவாரா? - பைனலில் கமல் அளித்த சூசக பதில்