MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • எதிர்பாராததை எதிர்பாருங்கள்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

எதிர்பாராததை எதிர்பாருங்கள்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா, சரவண விக்ரம் மற்றும் ரவீனா ஆகிய மூன்று பேர் மட்டுமே சிக்கி உள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 22 2023, 10:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Elimination

Bigg Boss Elimination

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களை காட்டிலும் இந்த சீசன் தான் அதிகளவிலான சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. படிப்பு விஷயத்தில் ஜோவிகா - விசித்ரா இடையே நடந்த மோதல் முதல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது வரை எக்கச்சக்கமான சம்பவங்கள் நடந்துள்ளன.

24
Vichithra

Vichithra

இப்படி பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத சீசனாக விளங்கி வரும் இது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதனால் போட்டியாளர்களின் உறவினர்கள் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் இந்த வாரம் முழுக்க செம்ம ஜாலியாக சென்று கொண்டிருக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Raveena

Raveena

இப்படி டாஸ்க் ஜாலியாக இருந்தாலும் இந்த வாரம் எவிக்‌ஷனும் நிச்சயம் இருக்கிறது. அதன்படி இதுவரை பிக்பாஸ் வரலாற்றில் இப்படி ஒரு நாமினேஷல் லிஸ்ட் இருந்ததில்லை. இந்த முறை வெறும் 3 பேர் மட்டுமே நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அதன்படி விசித்ரா, சரவண விக்ரம் மற்றும் ரவீனா ஆகியோர் தான் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள். இவர்களில் ஒருவர் தான் இந்த வார இறுதியில் எலிமினேட் ஆக உள்ளார்.

44
saravana vickram

saravana vickram

இந்த நிலையில், மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் இந்த வாரம் அதிக வாக்குகளை பெற்று விசித்ரா முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரவீனாவுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் இந்த வாரம் சரவண விக்ரம் தான் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டைட்டில் வின்னர் ஆகும் ஆசையுடன் இருந்த இவருக்கு இந்த வார இறுதியில் அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... Salaar Review : அடுத்த பாகுபலியா? இல்ல அடுத்த ஆதிபுருஷ்-ஆ? எப்படி இருக்கு பிரபாஸின் சலார்? முழு விமர்சனம் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
ரவீணா தாஹா

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிக் பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய திவ்யா கணேஷ்... டிராபியோடு அவர் அள்ளிச் சென்ற பரிசுகள் என்னென்ன?
Recommended image2
பிக் பாஸ் பைனலிஸ்டுகளுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதிலும் திவ்யா தான் டாப்பு..!
Recommended image3
பிக் பாஸ் பைனல்ஸில் பார்வதி - கம்ருதீன்... ஷாக் ஆன சாண்ட்ரா; இன்ப அதிர்ச்சியில் விஜய் சேதுபதி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved