Asianet News TamilAsianet News Tamil

Salaar Review : அடுத்த பாகுபலியா? இல்ல அடுத்த ஆதிபுருஷ்-ஆ? எப்படி இருக்கு பிரபாஸின் சலார்? முழு விமர்சனம் இதோ

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக திரைக்கு வந்துள்ள சலார் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Prashanth neel directional Prabhas Starrer Salaar movie review gan
Author
First Published Dec 22, 2023, 8:44 AM IST

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் சலார். கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருக்கிறார். இரு நண்பர்களுக்கு இடையேயான மோதலை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல்.

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 3 படங்களும் பெரியளவில் சோபிக்காததால் சலார் படத்தின் வெற்றியை அவர் மலைபோல் நம்பி இருக்கிறார். இந்த நிலையில், சலார் திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது. ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்களில் இப்படத்தின் முதல் காட்சி அதிகாலையிலேயே திரையிடப்பட்டது. இப்படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விமர்சனங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Prashanth neel directional Prabhas Starrer Salaar movie review gan

பிரபாஸின் லுக்கும் நடிப்பும் வெறித்தனமாக உள்ளது. பிருத்விராஜின் ரோல் செம்ம மாஸ். இந்திய சினிமாவின் சிறந்த இண்டர்வெல் பிளாக் இப்படத்தின் இடைவேளை காட்சி உள்ளது. சண்டை மற்றும் காட்சியமைப்பு அருமை. எமோஷனல் காட்சிகள் சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. கிளைமாக்ஸ் கொலமாஸாக உள்ளது. குறிப்பாக முதல் பாதியை விட இரண்டாம் பாதி ஒரு படி மேலே உள்ளது. இந்த படத்தை பெரிய திரையிம் மிஸ் பண்ணாம பாருங்க என பதிவிட்டுள்ளார்.

மான்ஸ்டர் ஆக்‌ஷன் டிராமா தான் இந்த சலார் திரைப்படம். ஆக்‌ஷன் பட விரும்பிகளுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். பிரபாஸின் நடிப்பு புல்லரிக்க வைக்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகள் வெறித்தனமாக உள்ளது. சீட்டில் இருந்து துள்ளிக் குதித்து ரசிக்கும்படி நிறைய காட்சிகள் உள்ளன. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டாசாய் வெடிக்க உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சலார் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் திரைப்படம். பிரபாஸின் நடிப்பு படத்தை வேறலெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கம் டாப் கிளாஸ். இது ஒரு மாஸ் பிளாக்பஸ்டர் படம். ரிபெல் இஸ் பேக். சுனாமி லோடிங் என பதிவிட்டு ஃபயர் விட்டுள்ளார்.

சலார் திரைப்படம் நிறைய ஆக்‌ஷன், நிறைய டுவிஸ்ட், நிறைய சர்ப்ரைஸ் நிறைந்த படமாக உள்ளது. இந்த மாஸ் திரைப்படத்தில் பிரபாஸின் நடிப்பு பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. பைசா வசூல் திரைப்படம் இது. ஆயிரம் கோடி லோடிங் என குறிப்பிட்டுள்ளார்.

சலார் சுத்தமாக எடுபடவில்லை. எல்லா திரைப்படமும் கேஜிஎப் போன்ற மேஜிக்கை திரும்ப கொண்டுவர முடியாது. பிரசாந்த் நீலிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை என தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.

சலார் மோசமான திரைப்படம். கதைக்களம் சரியாக இல்லை. ஆக்‌ஷன் காட்சிகளும் சில சீன்களும் கேஜிஎப் போன்றே உள்ளன. இது உக்ரம் படத்தின் ரீமேக். பிரபாஸின் நடிப்பு, படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கம் எதுவும் கவரவில்லை. இது நல்ல படம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது எக்ஸ் தளத்தில் சலார் திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு வசூலை வாரிக்குவிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... Legend Saravanan Next Movie: லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ் - சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

Follow Us:
Download App:
  • android
  • ios