MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • பொதுமக்கள் அடையாளத்தோடு சென்ற தனலட்சுமிக்கு... பிக்பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பொதுமக்கள் அடையாளத்தோடு சென்ற தனலட்சுமிக்கு... பிக்பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அடையாளத்தோடு கலந்துகொண்ட தனலட்சுமிக்கு பிக்பாஸ் வழங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
| Updated : Dec 26 2022, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்றதற்கு காரணம் ஜிபி முத்து. அவரால் முதல் இரண்டு வாரம் கலகலப்பாக சென்ற நிலையில், திடீரென தனது மகனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் பாதியிலேயே வெளியேறியதால் சற்று டல் அடிக்க தொடங்கியது.

24

பின்னர் இந்நிகழ்ச்சியை விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொண்டது இரண்டே பேர் தான். ஒன்று அசீம் மற்றொன்று தனலட்சுமி. இதில் அசீம் சீரியலில் நடித்து பாப்புலர் ஆனவராக இருந்தாலும், தனலட்சுமி பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றவர். அவர் விளையாடிய விதம், யாராக இருந்தாலும் துணிந்து நின்று கேள்வி கேட்பது ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

குறிப்பாக இந்த சீசனில் முதன்முதலில் குறும்படம் போடப்பட்டது தனலட்சுமிக்காக தான். பொம்மை டாஸ்க்கில் அசீம் அவர்மீது வைத்த குற்றச்சாட்டை குறும்படம் போட்டு அது பொய் என நிரூபித்தார் கமல்ஹாசன். இவ்வாறு பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளராக இருந்து வந்த தனலட்சுமி நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார்.

இதையும் படியுங்கள்... ரியல் ஹீரோ என நிரூபித்த சூர்யா... ரசிகர்களின் மேற்படிப்பு மற்றும் வேலை கிடைக்க உதவுவதாக வாக்குறுதி

34

அவரது எவிக்‌ஷன் நியாயமற்றது என அவரது ரசிகர்கள் குரல்கொடுத்து வருகின்றனர். எதுவுமே செய்யாமல் இருக்கும் மைனா, ரச்சிதா போன்றவர்களெல்லாம் வீட்டுக்குள் இருக்கும்போது நன்றாக விளையாடிய தனலட்சுமியை எலிமினேட் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது என பிக்பாஸ் ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.

44

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அடையாளத்தோடு கலந்துகொண்ட தனலட்சுமிக்கு பிக்பாஸ் வழங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு ஒருநாளைக்கு ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் இருந்த 76 நாட்களுக்கு மொத்தமாக ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மகளின் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய போனி கபூர்! முன்னாள் முதல்வரின் பேரனுடன் ஜான்விக்கு விரைவில் திருமணம்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிக் பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய திவ்யா கணேஷ்... டிராபியோடு அவர் அள்ளிச் சென்ற பரிசுகள் என்னென்ன?
Recommended image2
பிக் பாஸ் பைனலிஸ்டுகளுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதிலும் திவ்யா தான் டாப்பு..!
Recommended image3
பிக் பாஸ் பைனல்ஸில் பார்வதி - கம்ருதீன்... ஷாக் ஆன சாண்ட்ரா; இன்ப அதிர்ச்சியில் விஜய் சேதுபதி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved