MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Snake In Car: கார் இன்ஜின் சூடாக இருந்தாலும் பாம்புகள் ஏன் நுழைகின்றன? பின்னணியில் சயின்ஸ்!

Snake In Car: கார் இன்ஜின் சூடாக இருந்தாலும் பாம்புகள் ஏன் நுழைகின்றன? பின்னணியில் சயின்ஸ்!

Snake In Car: எப்போதும் சூடாக இருக்கும் கார், பைக் இன்ஜினில் பாம்புகள் ஏன் நுழைகின்றன என்று உங்களுக்கு சந்தேகம் எழலாம். வாகனங்களுக்குள் பாம்புகள் ஏன் நுழைகின்றன? வாகனங்களை எப்படி பாதுகாப்பாக நிறுத்துவது? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 07 2026, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
  கார், பைக்கில் பாம்புகள் நுழைவது ஏன்?
Image Credit : AI

கார், பைக்கில் பாம்புகள் நுழைவது ஏன்?

மழைக்காலம் தொடங்கி விட்டாலே வீடு, கார், பைக் என எல்லா இடங்களிலும் பாம்புகள் தென்படுகின்றன. காருக்குள், குறிப்பாக எப்போதும் சூடாக இருக்கும் இன்ஜின் பகுதி அல்லது பானெட்டுக்கு அடியில் பாம்புகள் ஏன் நுழைகின்றன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கான காரணம் என்ன தெரியுமா? இதுபோன்ற சமயங்களில் உங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது? பாம்புகள் வராமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாம்பு நுழைவதற்கு இதுதான் காரணம்

மழைக்காலத்தில் பாம்புகளின் புற்றுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். அதனால், அவை பாதுகாப்பான, உலர்ந்த இடங்களைத் தேடி வெளியேறுகின்றன. கார் அல்லது பைக் இன்ஜின் அணைக்கப்பட்ட பிறகும் சிறிது நேரம் சூடாக இருக்கும். இந்த வெப்பம் பாம்புகளை ஈர்க்கிறது. மேலும், காருக்கு அருகில் வரும் எலி போன்ற சிறிய உயிரினங்களை வேட்டையாடவும் பாம்புகள் அங்கு வருகின்றன.

இதையும் படிங்க: டாடா EV-க்களுக்கே டஃப் கொடுக்கும் MG Windsor! 75,000 பேர் வாங்கிய 'ABC' காரில் அப்படி என்ன ஸ்பெஷல்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
காரை எங்கே பாதுகாப்பாக நிறுத்துவது?
Image Credit : AI

காரை எங்கே பாதுகாப்பாக நிறுத்துவது?

காரின் இன்ஜின், பானெட்டுக்குக் கீழ் எனப் பல இடங்களில் பாம்புகள் பதுங்கிக்கொள்ளும். வயல், தோட்டம், பார்க்கிங், காலி இடங்கள் அல்லது பசுமையான பகுதிகளில் உங்கள் கார் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தால், பாம்புகள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. காரை எப்போதும் பாதுகாப்பான, சுத்தமான இடத்தில் பார்க் செய்யுங்கள். முடிந்தால், மூடிய கேரேஜைப் பயன்படுத்துங்கள். காருக்கு அருகில் குப்பை, காய்ந்த புல் அல்லது தேவையற்ற பொருட்களைக் குவிக்க வேண்டாம்.

நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் காரை அவ்வப்போது ஸ்டார்ட் செய்து சிறிது தூரம் ஓட்டுங்கள். இன்ஜின் பகுதியை அடிக்கடி சோதித்துப் பாருங்கள். நீண்ட நேரம் நின்ற காரை ஓட்டுவதற்கு முன், பானெட்டைத் திறந்து இன்ஜினைச் சுற்றி ஒருமுறை பாருங்கள். காருக்குள் ஏதேனும் வித்தியாசமான சத்தம் கேட்டால் உடனடியாக எச்சரிக்கையாக இருங்கள்.

இதையும் படிங்க: Revolt RVX: இனி பெட்ரோல் செலவே இல்லை! சிங்கிள் சார்ஜில் 160 கி.மீ போலாம்! ஆபர் விலையில் எலெக்ட்ரிக் பைக்!

33
கார் இன்ஜினில் பாம்பு இருந்தால் செய்யக் கூடாதவை
Image Credit : Canva

கார் இன்ஜினில் பாம்பு இருந்தால் செய்யக் கூடாதவை

பாம்பைக் கண்டதும் பயந்து கத்தவோ, அதை குச்சியால் அடிக்கவோ, கார் இன்ஜினுக்குள் கையை விட்டு இழுக்கவோ முயலக் கூடாது. முக்கியமாக, பாம்பை விரட்டுவதற்காக காரை ஸ்டார்ட் செய்யக் கூடாது. கார் பெல்ட்களில் பாம்பு சிக்கி, கார் சேதமடைவதோடு பாம்பும் ஆக்ரோஷமாக மாறலாம். காரின் கதவுகள் மற்றும் பானெட்டை (Bonnet) திறந்து வைத்துவிட்டு சிறிது தூரம் தள்ளி நிற்க வேண்டும். அதற்குப் போதிய வழி கிடைத்தால் அதுவாகவே வெளியேறிவிடும். இல்லையெனில், வனத்துறை அல்லது பாம்பு பிடிப்பவர்களையே அழைக்க வேண்டும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கார் செய்தி
ஆட்டோ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hyundai Bayon SUV: வென்யூ, கிரெட்டாவுக்கு நடுவில் புது ஹூண்டாய் எஸ்யூவி.. ஹூண்டாய் பாயோன் புக்கிங் ஓபன் ஆயிடுச்சு
Recommended image2
EV Cars : ₹15 லட்சத்துக்குள் 5 எலெக்ட்ரிக் கார்கள்! பட்ஜெட்டுக்கு ஏற்ற கார் எது? ரேஞ்ச், விலை முழு லிஸ்ட்
Recommended image3
Mahindra : ஒரே சார்ஜில் 456 கி.மீ ரேஞ்ச் கொடுத்தும் வாங்க ஆளில்லை.. அதலபாதாளத்தில் மஹிந்திரா EV கார் விற்பனை!
Related Stories
Recommended image1
Petrol Diesel Update: பைக், கார் வச்சிருக்கீங்களா? ஜூலை 1 முதல் ஹேப்பி நியூஸ்! மத்திய அரசு அப்டேட்!
Recommended image2
Car Tips : கார் கண்ணாடியில உருளைக்கிழங்கை தேய்ச்சா என்ன ஆகும்? இந்த மேஜிக் பின்னாடி ஒரு சயின்ஸ் இருக்கு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved