- Home
- Auto
- Car Tips : கார் கண்ணாடியில உருளைக்கிழங்கை தேய்ச்சா என்ன ஆகும்? இந்த மேஜிக் பின்னாடி ஒரு சயின்ஸ் இருக்கு!
Car Tips : கார் கண்ணாடியில உருளைக்கிழங்கை தேய்ச்சா என்ன ஆகும்? இந்த மேஜிக் பின்னாடி ஒரு சயின்ஸ் இருக்கு!
Car Tips : மழைக்காலத்துல கார் ஓட்டும்போது டிரைவர்கள் சந்திக்கிற பெரிய பிரச்னை, வின்ட்ஷீல்டுல மழைத் தண்ணி நின்னு ரோடு தெரியாம போறதுதான். ஆனா, நம்ம வீட்டுல இருக்குற சாதாரண உருளைக்கிழங்கை வெச்சே இந்த பிரச்னையை ஓரளவுக்கு சரிபண்ணலாம் தெரியுமா?

Rub a potato on your car windshield and see the magic
உருளைக்கிழங்குல ஸ்டார்ச் (மாவுச்சத்து) அதிகமா இருக்கு. ஒரு பச்சை உருளைக்கிழங்கை ரெண்டா வெட்டி, அதன் உள்பக்கத்தை கார் கண்ணாடி மேல நல்லா தேய்க்கணும். அப்போ, அந்த ஸ்டார்ச் கண்ணாடி மேல ஒரு மெல்லிய படலமா உருவாகும். இந்த படலம், தண்ணீர் கண்ணாடி மேல நிக்காம, ஈஸியா வழுக்கிட்டுப் போக உதவும். இதனால, மழைத்தண்ணி தேங்காம, டிரைவிங்கின்போது ரோடு தெளிவா தெரியும்.
பரப்பு இழுவிசை
இந்த டெக்னிக், 'பரப்பு இழுவிசை' (Surface Tension) அப்படிங்கிற அறிவியல் கொள்கையின் அடிப்படையில வேலை செய்யுது. சாதாரணமா, மழைத்துளி கண்ணாடி மேல பட்டா, அது பரவி ஒரு தண்ணீர் படலத்தை உருவாக்கும். இதனால பார்வை மங்கிடும். ஆனா, கண்ணாடி மேல ஸ்டார்ச் படலம் இருக்கும்போது, தண்ணீர் துளிகள் பரவாம, சின்ன சின்ன உருண்டைகளா நிக்கும். வண்டி ஓடும்போது வர்ற காத்துல அதுங்க ஈஸியா கீழ வழுக்கி ஓடிடும்.
எப்படி செய்வது?
முதல்ல, கார் கண்ணாடியை சுத்தமான துணியால நல்லா துடைச்சுக்கோங்க. அப்புறம், ஒரு பச்சை உருளைக்கிழங்கை ரெண்டா வெட்டி, அதன் உள்பக்கத்தை வின்ட்ஷீல்டு, சைடு மிரர், பின்பக்க கண்ணாடி எல்லாத்துலயும் மெதுவா தேயுங்க. சில நிமிஷம் காய விட்டுட்டு, ஒரு மைக்ரோஃபைபர் துணியால மெதுவா துடைச்சு எடுத்தா போதும். இப்படி செஞ்சா, ஸ்டார்ச் கறை தெரியாம கண்ணாடி பளபளன்னு இருக்கும்.
மலிவு விலை மேஜிக்
இது ரொம்ப குறைஞ்ச செலவுல செய்யக்கூடிய ஒரு ஈஸி டிப். விலை உயர்ந்த ஆன்ட்டி-ஃபாக் ஸ்ப்ரேக்கள் அல்லது ஸ்பெஷல் கெமிக்கல் கோட்டிங் எதுவும் வாங்கத் தேவையில்லை. ஆனா, இது ஒரு நிரந்தர தீர்வு கிடையாது. இதோட பலன் கொஞ்ச நேரத்துக்குத்தான் இருக்கும். முக்கியமா, கனமழை பெய்யும்போது கண்டிப்பா காரோட வைப்பர்களையும், வின்ட்ஷீல்டு வாஷர் சிஸ்டத்தையும் சரியா பயன்படுத்தணும். பாதுகாப்புக்கு எப்போதுமே கார் கண்ணாடியை சுத்தமா வெச்சுக்கோங்க.

