- Home
- Auto
- Revolt RVX: இனி பெட்ரோல் செலவே இல்லை! சிங்கிள் சார்ஜில் 160 கி.மீ போலாம்! ஆபர் விலையில் எலெக்ட்ரிக் பைக்!
Revolt RVX: இனி பெட்ரோல் செலவே இல்லை! சிங்கிள் சார்ஜில் 160 கி.மீ போலாம்! ஆபர் விலையில் எலெக்ட்ரிக் பைக்!
Revolt RVX: ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம்ரிவோல்ட் ஆர்விஎக்ஸ் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் 160 கி.மீ. மைலேஜ் கொடுக்கிறது. மணிக்கு 90 கி.மீ. வேகம் செல்கிறது. இந்த பைக்கின் விலை, சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

Revolt RVX எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்
Revolt Motors நிறுவனம் அட்டகாசமான ஒரு புதிய பைக்கை களமிறக்கியுள்ளது. Revolt RVX என்ற இந்த புதிய எலெக்ட்ரிக் பைக், அதிக மைலேஜ், புதிய வெர்ஷன் மற்றும் பல அப்டேட்டட் அம்சங்களுடன் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் விலை, டிசைன், சிறப்பம்சங்கள், பேட்டரி உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
முழு சார்ஜில் 160 கிமீ போகலாம்
இந்த பைக்கில் 3.24 kWh திறன் கொண்ட போர்ட்டபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது பைக்கிற்கு நல்ல பவரை கொடுக்கிறது. இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 160 கி.மீ. வரை மைலேஜ் தரும். அதாவது ஒருமுறை சார்ஜ் செய்தால் நெல்லையில் இருந்து மதுரைக்கு நிற்காமல் செல்ல முடியும்.
மேலும், இந்த பைக் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. முன்பக்கத்தில் USD ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண சார்ஜர் மூலம் பேட்டரியை 0-விலிருந்து 80% வரை சார்ஜ் செய்ய 3 மணி 30 நிமிடங்கள் ஆகும். அதே சமயம், ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் வெறும் 80 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடலாம்.
Revolt RVX பைக்கின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்
Revolt RVX எலெக்ட்ரிக் பைக், ப்ளூ, பேர்ல் பிளாக் மற்றும் எக்லிப்ஸ் ஒயிட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் டிசைன், சுறா மீனைப் போல ஷார்ப்பாக இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. மேலும், இதில் குயிக் பூஸ்ட் மோட், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், அப்டேட்டட் டெக்னாலஜி, ரிவர்ஸ் மோட் மற்றும் வாக் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. எடை குறைந்த அதே சமயம் உறுதியான கார்பன் பேனல்கள் மற்றும் நீளமான சீட் இதில் அடங்கும். ஒருவர் மட்டும் ஓட்டும்போது 14 டிகிரி வரையிலும், பின்னால் ஆள் இருக்கும்போது 11 டிகிரி வரையிலும் ஏற்றங்களில் எளிதாகச் செல்லும் திறன் கொண்டது.
டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் சவுண்ட் பாக்ஸ்
இதில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்புறம் மற்றும் பின்புறத்தில் முழு எல்இடி விளக்குகள், மற்றும் நான்கு விதமான பைக் சத்தங்களை எழுப்பும் சவுண்ட் பாக்ஸ் ஆகியவை உள்ளன. ரிவோல்ட் நிறுவனம் ஏற்கனவே பல அட்டகாசமான பைக்குகளை வெளியிட்டுள்ளது. RV1, RV1+, RV BlazeX, RV400 BRZ மற்றும் RV400 போன்ற மாடல்கள் இதில் அடங்கும். RV BlazeX தினசரி பயன்பாட்டிற்காகவும், 'RV400' செயல்திறனை விரும்புபவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் ஆஃபர்
Revolt RVX எலெக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹1.29 லட்சம். அரசு மானியத்துடன் சேர்த்து ₹1.24 லட்சத்திற்கு இது கிடைக்கும். டெல்லி அரசு, எலக்ட்ரிக் பைக் வாங்குவதற்குச் சிறப்பு மானியம் வழங்குகிறது. டெல்லியின் EV பாலிசியின் கீழ் இந்த பைக்கை வாங்கினால், இதன் விலை ₹95,000 ஆகக் குறையும். இதுமட்டுமின்றி, டெல்லி வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய பெட்ரோல்/டீசல் பைக்கை ஸ்கிராப் செய்துவிட்டு இந்த புதிய பைக்கை வாங்கினால், வெறும் ₹85,000-க்கு ரிவோல்ட் RVX உங்களுக்குக் கிடைக்கும். இந்த மாத இறுதியில், அதாவது ஜூலை கடைசி முதல் ரிவோல்ட் RVX பைக்கிற்கான புக்கிங் தொடங்குகிறது.

