வெறும் 7 லட்சம் தான் பட்ஜெட்! குடும்பங்களுக்கு ஏற்ற 5 சிறந்த கார்கள்
இந்தியாவில் நடுத்தர வர்க்க குடும்பங்கள் அதிகம். அதனால்தான் கார் உற்பத்தி நிறுவனங்களும் குறைந்த பட்ஜெட் கார்களை தயாரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. சந்தையில் ரூ.7 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த 5 கார்களின் விவரங்களை இப்போது தெரிந்துகொள்வோம்.

Maruti Suzuki Alto K10
இக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கார் அவசியமாகிவிட்டது. சிறியதோ, பெரியதோ ஒவ்வொரு வீட்டு முன்பும் கார் இருக்கிறது. குறிப்பாக நடுத்தர வர்க்க குடும்பங்கள் மலிவான மற்றும் சிறந்த கார்களை வாங்கவே அதிகம் விரும்புகின்றனர். தற்போது சந்தையில் சிறந்த 5 கார்களின் விவரங்கள் இங்கே.
மாரூதி சுசூகி ஆல்டோ K10
விலை: ரூ.4.23 லட்சம் முதல் ரூ.6.21 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்). நகரத்தைப் பொறுத்து விலையில் சிறிது மாற்றம் இருக்கும்.
இன்ஜின்: 1.0 லிட்டர் K-Series பெட்ரோல், 67 bhp பவர், 89 Nm டார்க்.
CNG வகையில் 56 bhp பவர், 82 Nm டார்க்.
டிரான்ஸ்மிஷன்: 5-ஸ்பீட் மேனுவல் அல்லது AMT.
அம்சங்கள்: 6 ஏர்பேக்குகள், 7-இன்ச் டச் ஸ்க்ரீன், ஸ்டீயரிங் மவுண்டட் கன்ட்ரோல்கள், ESP, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள்.
Maruti Suzuki Celerio
விலை: ரூ.5.5 லட்சம் முதல் ரூ.7.2 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நகரத்தைப் பொறுத்து விலையில் சிறிது மாற்றம் இருக்கும்.
இன்ஜின்: 1.0 லிட்டர் பெட்ரோல், 66 bhp பவர், 89 Nm டார்க்.
CNG வகையில் 56 bhp பவர், 82.1 Nm டார்க்.
டிரான்ஸ்மிஷன்: 5-ஸ்பீட் மேனுவல் அல்லது AMT
அம்சங்கள்: 6 ஏர்பேக்குகள், 7-இன்ச் டச் ஸ்க்ரீன், ஸ்டீயரிங் மவுண்டட் கன்ட்ரோல்கள், ESP, ஹில் ஹோல்ட் அசிஸ்ட்.
Tata Tiago
விலை: ரூ.5 லட்சம் முதல் ரூ.7.29 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நகரத்தைப் பொறுத்து விலையில் சிறிது மாற்றம் இருக்கும்.
இன்ஜின்: 1.2 லிட்டர் பெட்ரோல், 84 bhp பவர், 113 Nm டார்க்,
CNG வகையில் 72 bhp பவர், 95 Nm டார்க்.
டிரான்ஸ்மிஷன்: 5-ஸ்பீட் மேனுவல் அல்லது AMT
அம்சங்கள்: 10-இன்ச் டச் ஸ்க்ரீன், க்ரூஸ் கண்ட்ரோல், TPMS, க்ளைமேட் கண்ட்ரோல்.
Hyundai Santro
விலை: ரூ.5.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை(எக்ஸ்-ஷோரூம்) நகரத்தைப் பொறுத்து விலையில் சிறிது மாற்றம் இருக்கும்.
இன்ஜின்: 1.1 லிட்டர் பெட்ரோல், 69 PS பவர், 99 Nm டார்க்.
CNG வகையில் 60 PS பவர்.
டிரான்ஸ்மிஷன்: 5-ஸ்பீட் மேனுவல் அல்லது AMT
அம்சங்கள்: 8-இன்ச் டச் ஸ்க்ரீன், 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ப்ளூலிங்க் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், 360-டிகிரி கேமரா.
Tata Altroz
விலை: எக்ஸ்-ஷோரூம் ரூ.6.89 லட்சம் முதல் தொடங்குகிறது. பல்வேறு நகரங்களில் விலை சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
இன்ஜின்: 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல். இந்த கார் CNG வகையிலும் கிடைக்கிறது.
டிரான்ஸ்மிஷன்: 5-ஸ்பீட் மேனுவல், AMT, DCT
அம்சங்கள்: 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், iRA இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், ALFA கட்டமைப்பு.