- Home
- Auto
- இதுதான் சீரிஸிலேயே ஸ்பெஷல் எடிஷன்.. புதிய Stealth Black Himalayan 450 அறிமுகம்.. முழு விபரம் இதோ
இதுதான் சீரிஸிலேயே ஸ்பெஷல் எடிஷன்.. புதிய Stealth Black Himalayan 450 அறிமுகம்.. முழு விபரம் இதோ
ராயல் என்பீல்ட் தனது Motoverse 2025 நிகழ்ச்சியில், Himalayan 450 Mana Black Edition-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவே ஹிமாலயன் 450 வரிசையில் மிகவும் பிரீமியம் மற்றும் விலையுயர்ந்த மாடலாகும்.

ஹிமாலயன் 450 மனா பிளாக் பதிப்பு
ராயல் என்பீல்ட் தனது Motoverse 2025 நிகழ்ச்சியில் ஹிமாலயன் 450 மனா பிளாக் பதிப்பு (Himalayan 450 Mana Black Edition)-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு EICMA 2025-ல் காட்சிப்படுத்தப்பட்டது இந்த ஸ்பெஷல் எடிஷன். ஏற்கனவே அடுத்த லெவல் அட்வென்ச்சர் பைக்காக பெயர் பெற்ற ஹிமாலயன் 450-க்கு இது கூடுதல் ஆஃப்-ரோடு திறனையும், ஸ்டைலிஷ் லுக்கையும் சேர்க்கிறது.
அனைத்து வெரியண்ட்களிலும் இதுவே மிகவும் பிரீமியம் மற்றும் மிக விலையுயர்ந்த மாடல் ஆகும். ஹான்லே பிளாக் வெரியண்டை விட கூடுதல் விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.37 லட்சம்.
ஸ்டீல்த் பிளாக்
- Mana Black Edition-ன் முக்கியஅம்சமே அதன் Stealth Black நிறமே.
- மேட் + சாட்டின் ஃபினிஷ் கொண்ட ஃபியூயல் டேங்க், சைடு பேனல்கள்.
- என்ஜின் கேசிங், சாச்சி, ரிம்களும் டார்க் தீமில் கிடைக்கிறது.
ஸ்டெல்த் பிளாக்
இந்த ஸ்பெஷல் எடிஷனில் Rally Kit முன்பே பொருத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ளவை:
- ராலி ஸ்டைல் ரியர் கவுல்
- ஒரு பீஸ் ராலி சீட்
- அலுமினியம் பிரேஸ் கொண்ட ராலி ஹென்ட் கார்டுகள்
- உயரத்தில் பொருத்தப்பட்ட ராலி மட் கார்டு
இந்த அம்சங்களால் பைக் மிக அதிகமாக ஆஃப்-ரோடு திறன் பெறுகிறது.
பிரச்சனை குறையும், பாதுகாப்பு மேம்பாடும்
- குறுக்கு ஸ்போக் வீல்கள் + டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
- ஆஃப்-ரோடில் பஞ்சர் ஏற்பட்டாலும் ரைடருக்கு குறைவான தொந்தரவுமட்டுமே ஏற்படும்.
- டியூப்லெஸ் டயர்கள் நீண்ட பயணங்களில் அதிக நிலைத்தன்மை கொடுக்கும்.

