32 கி.மீ. மைலேஜ்: பைக்குக்கே டஃப் கொடுக்கும் புதிய ஸ்விப்ட் CNG கார் 12ல் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
மாருதி நிறுவனம் 32 கி.மீ. மைலேஜ் தரும் வகையில் 4ம் தலைமுறை ஸ்விப்ட் காரின் சிஎன்ஜி வெர்ஷன் வருகின்ற 12ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Swift Car
இந்திய கார் சந்தையில் மாருதி நிறுவனத்தின் கார்களுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாரு பட்ஜெட் விலையில் நல்ல மைலேஜ் தரும் வகையில் கார்களை வெளியிட்டு வருவதால் மாருதி நிறுவனத்தின் கார்களுக்கு எப்போதும் மார்கெட்டில் டிமேன்ட் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் மாருதி நிறுவனம் கடந்த மே மாதம் தனது 4ம் தலைமுறை ஸ்பிப்ட் காரை சந்தையில் அறிமுகப்பத்தியது.
Swift Car
மாருதி நிறுவனம் பல்வேறு கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், ஸ்விப்ட் காரின் பெட்ரோல் வேரியண்ட் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக கார் பிரியர்களுக்கு இருந்து வந்தது. மேலும் அதிக மைலேஜ் தரும் கார்கள் மீது இந்திய மக்களுக்கு எப்போதும் அதிக கவனம் உண்டு என்பதால் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Swift CNG Car
அதன்படி மாருதி நிறுவனம் தனது ஸ்விப்ட் சிஎன்ஜி வெர்சன் கார் வருகின்ற 12ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இது கார் பிரியர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. மாருதி நிறுவனம் தனது புதிய ஸ்விப்ட் காரில் இசட் சீரிஸ் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பொருத்தி உள்ளது. இது 82 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Best Mileage Car
இந்த என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் அல்லது 5 ஸ்பீடு ஆடோமேடிக் கியர் பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதே கார் சிஎன்ஜி வெர்ஷனில் வெளியாகும் பட்சத்தில் இதே என்ஜின் பயன்படுத்தப்படும். ஆனால் பவர் மற்றும் டார்க் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேனுவல் கியரில் 24.8 கி.மீ. மைலேஜ்ம், ஆட்டோ கியரில் 25.75 கி.மீ. மைலேஜ்ம் வழங்கும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே காரில் சிஎன்ஜி வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டால் 32 கி.மீ. மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Swift Car
பொதுவாக மாருதி நிறுவனம் தனது ஒவ்வொரு காரின் சிஎன்ஜி வெர்ஷனை வெளியிடும் போதும் அது மற்ற வெர்ஷன் கார்களை விட ரூ.95 ஆயிரம் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும். அதே பார்முலா இந்த காருக்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் சிஎன்ஜி கார் ரூ.95 ஆயிரம் கூடுதலாக விற்கப்பட வாய்ப்பு உள்ளது.