லைசென்ஸ் தேவை இல்லை.. 400 கிலோ வரை எடை தாங்கும்.. தள்ளுபடி விலையில் கிடைக்குது மக்களே
வணிக பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட EOX E5 Plus லோடர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், 400 கிலோ வரை சுமை தாங்கும் திறன் கொண்டது. மணிக்கு 25 கி.மீ வேகத்தில் செல்வதால் இதற்கு லைசென்ஸ், பதிவு தேவையில்லை.

லோடர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
வணிகத்திற்காக சுமைகளை ஏற்றிச் செல்ல மின்சக்கர வண்டி தேடுகிறீர்களா? அப்படியானால் EOX நிறுவனத்தின் E5 Plus Loader Electric Scooter உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். இது சாதாரண ஸ்கூட்டர் அல்ல குறிப்பாக சுமைகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. தண்ணீர் கேன்கள், மின்சாதனங்கள், ஆடைகள், குளிர்சாதன பெட்டிகள் போன்ற பெரும் எடைகளை ஏற்றிக் கொண்டு செல்ல சிறந்த தேர்வாக மதிப்பிடப்படுகிறது. தினசரி பயணத்திற்கும் பயன்படுத்தலாம். இந்த மின்சக்கர வண்டியின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால் 400 கிலோ எடையை எடுத்துச் செல்லும் திறன் ஆகும். அதுமட்டுமன்றி, லைசென்ஸ், பதிவு, நம்பர் பிளேட் என எதுவும் தேவையில்லை.
லைசென்ஸ் தேவையில்லை
ஏனெனில் இதன் அதிகபட்ச வேகம் 25 கி.மீ மட்டுமே. அதிக சுமை ஏற்றிச் செல்லும்போது வேகமாக செல்வது ஆபத்து என்பதால் இந்த திட்டமிடல் என நிறுவனம் விளக்குகிறது. 60V லித்தியம் அயன் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 4-6 மணிநேரத்தில் சார்ஜ் ஆகும், மேலும் ஆட்டோ கட்-ஆஃப் வசதி உள்ளது. ஒரு முழு சார்ஜில் 50–70 கி.மீ பயணம் செய்யும். ஆனால் பயனர் மதிப்பீடுகள் படி சராசரியாக 40 கி.மீ செல்லுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டிரைவிங் முறைகள் Eco, Sports, High Speed என மூன்று உள்ளது. அதிகபட்சம் 25 கி.மீ வேகம் என்பதால் பெரும்பாலும் அனைவரும் High Speed பயன் படுத்துகிறார்கள்.
400 கிலோ சுமை ஸ்கூட்டர்
சக்திவாய்ந்த BLDC மோட்டார், பின்புறத்தில் பெரிய லோடரிங் செட்-அப், முன்புறத்தில் கூடுதல் பொருட்களுக்கான கூடை, இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டியூப்லெஸ் டயர், ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் போன்றவை குறிப்பிடத்தக்கவை அம்சங்கள். Anti-theft lock, IP67 பேட்டரி பாதுகாப்பு, reverse parking mode போன்ற ஸ்மார்ட் அம்சங்கள்-உம் உள்ளது. இதன் அசல் விலை ரூ.1,50,000 ஆனால் Amazon-ல் 48% தள்ளுபடியில் ரூ.78,499க்கு கிடைக்கிறது. வங்கி சலுகைகள் மூலம் மேலும் ரூ.4,500 வரை தள்ளுபடி, கேஷ்பேக் ரூ.2,354 வரை கிடைக்கும். EMI ரூ.3,806 முதல் தொடங்குகிறது. ஒரு வருட உத்தரவாதம் உள்ளது. வணிக நோக்கத்தில் சுமை ஏற்றிச் செல்ல வேண்டியவர்களுக்கு நல்ல தேர்வு. பாதுகாப்பு அம்சங்கள், நீக்கக்கூடிய பேட்டரி, டிஸ்க் பிரேக்குகள் போன்றவை அதன் மதிப்பை உயர்த்துகின்றன. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள டீலரை தொடர்பு கொள்வது அவசியம் ஆகும்.

