ஜீப் ஓனர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்.. 7 ஆண்டுக்கு கவலையில்லை!
ஜீப் இந்தியா தனது மெரிடியன் மற்றும் காம்பஸ் மாடல்களுக்காக “Jeep Confidence 7” என்ற புதிய பிரீமியம் ஓனர்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் 7 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, பராமரிப்புத் தொகுப்பை வழங்குகிறது.

ஜீப் கான்ஃபிடன்ஸ் 7
ஜீப் இந்தியா தனது எஸ்யூவி வாடிக்கையாளர்களுக்காக புதிய பிரீமியம் ஓனர்ஷிப் திட்டமாக “Jeep Confidence 7”-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட காலத்தில் ஜீப் ஓனர்ஷிப் அனுபவத்தை நம்பிக்கையுடன் மாற்றும் வகையில் இந்த திட்டம் குறிப்பாக ஜீப் மெரிடியன் மற்றும் ஜீப் காம்பஸ் மாடல்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. உலகத் தரமான சேவை, நம்பகமான பராமரிப்பு மற்றும் முழுமையான வாடிக்கையாளர் ஆதரவை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் பராமரிப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.
ஜீப் காம்பஸ் பராமரிப்பு
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எதிர்பாராத செலவுகளை குறைத்து, திட்டமிட்ட செலவிலேயே காரை பராமரிக்க முடியும். மேலும், வாகன பராமரிப்பு தொடர்பான அனுபவம் தடையின்றி சீராக நடக்க உதவும் என்பதால், நீண்ட கால பயணங்களில் மனநிம்மதி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “Confidence 7” திட்டத்தில் மற்றொரு பெரிய பலனாக உறுதியான Buyback வசதி குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வாகனத்தை அப்கிரேடு செய்யும்போதோ அல்லது மீண்டும் விற்கும்போதோ, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையும் பாதுகாப்பும் கிடைக்கும்.
7 ஆண்டு வாரண்டி
இத்துடன் இணைந்த சேவை சலுகைகள், ஓட்டுநருக்கு உயர்தர அனுபவத்தை வழங்குவதுடன், வாகனத்தின் மீள் விற்பனை மதிப்பையும் அதிகரிக்க உதவும். இந்த திட்டத்தின் விலை அடிப்படையில் பார்க்கும்போது, Compass மாடலுக்கு ரூ.41,926 முதல் மற்றும் Meridian மாடலுக்கு ரூ.47,024 முதல் தொடங்குகிறது. இதுபற்றி பேசிய ஸ்டெல்லாண்டிஸ் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி குமார் பிரியேஷ், இது வாடிக்கையாளர்களுக்கான ஜீப்பின் உறுதியான அர்ப்பணிப்பை காட்டுகிறது என தெரிவித்தார். வெளிப்படைத்தன்மை, நீண்ட கால மதிப்பு மற்றும் எளிதான சேவையை விரும்பும் இன்றைய வாடிக்கையாளர்களுக்கு இது சரியான தீர்வு என்றும் அவர் கூறினார்.

