ரூ.94,999-க்கு 142km ரேஞ்சா? 5 ஆண்டுகள் வாரண்டி கொடுக்குறாங்க.. ஆம்பியர் ஸ்கூட்டர் கலக்குது
ஆம்பியர் நிறுவனம் புதிய குடும்ப பயன்பாட்டுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மேக்னஸ் EX-ஐ ரூ.94,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் 5 ஆண்டு பேட்டரி வாரண்டியுடன், தினசரி பயணங்களுக்கு ஏற்ற ஒரு நம்பகமான தேர்வாக அமைகிறது.

ஆம்பியர் மேக்னஸ் ஜி மேக்ஸ்
ஆம்பியர் நிறுவனம் தனது புதிய குடும்ப பயன்பாட்டுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மேக்னஸ் ஜி மேக்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.94,999 (எக்ஸ்-ஷோரூம்) விலையிலான இந்த மாடல், ரூ.1 லட்சத்திற்கு கீழ் நல்ல ரேஞ்ச், அதிக ஸ்டோரேஜ் வசதி, நீடித்த பேட்டரி போன்ற தினசரி தேவைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 3kWh LFP பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
100 கிமீ ரேஞ்ச் ஸ்கூட்டர்
சாதாரண லித்தியம்-அயன் பேட்டரியுடன் ஒப்பிடும் போது, LFP பேட்டரிகள் அதிக வெப்ப நிலைத்தன்மை கொண்டதாக கருதப்படுவதால், நீண்ட கால பயன்படுத்துதலுக்கு இது உதவும். மேலும், 5 ஆண்டு / 75,000 கி.மீ பேட்டரி வாரண்டி வழங்கப்படுவது முதல்முறையாக EV வாங்கும் குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் அம்சமாக உள்ளது. ரேஞ்ச் விஷயத்தில், Eco மோட்டில் 100 கி.மீ-க்கும் மேல் செல்லும் திறன் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆம்பியர் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
அதே நேரத்தில், சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் 142 கி.மீ எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 20% முதல் 80% வரை சார்ஜ் ஆக 4.5 மணி நேரம் ஆகும் என்பதால், இரவு நேரத்தில் சார்ஜ் செய்து அடுத்த நாள் பயணத்திற்கு தயாராக வைத்துக் கொள்ள முடியும். ஸ்டோரேஜ் வசதியாக 33 லிட்டர் அண்டர்-ஸீட் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செக்மென்டில் பெரியதாக கருதப்படுவதால், ஹெல்மெட், கிராசரி பொருட்கள் போன்றவற்றை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஸ்கூட்டருக்கு 1.5kW நாமினல், 2.4kW பீக் பவர் தரும் ஹப் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த EV-யில் Eco, City, Reverse மோடுகள் உள்ளன. அதிகபட்ச வேகம் 65 கி.மீ/மணி, 165மிமீ கிரௌண்ட் கிளியரன்ஸ், டெலிஸ்கோபிக் முன் சஸ்பென்ஷன், டூயல் ரியர் ஷாக்ஸ், 3.5 இன்ச் LCD, LED லைட்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. நிறங்களில் Monsoon Blue, Matcha Green, Cinnamon Copper என்ற 3 டூயல்-டோன் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன.

