ரூ.56,551க்கு புதிய கார்கோ இ-ஸ்கூட்டர்.. 150kg லோட் கேரிங்.. ரேஞ்ச் எவ்வளவு?
Zelio E-Mobility நிறுவனம், டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் சிறு வியாபாரங்களுக்காக தனது Logix Cargo இ-ஸ்கூட்டரின் 2026 ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.56,551 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, இந்திய மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பாளரை Zelio E-Mobility, தனது Logix Cargo e-scooter-ன் 2026 ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக டெலிவரி பார்ட்னர்கள், கிக் வோர்க்கர்கள் மற்றும் சிறு வியாபாரங்களுக்கு பயன்படும் வகையில் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் தொடக்க விலை ரூ.56,551 என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய 2026 Zelio Logix ஸ்கூட்டரில் முன்பக்க வடிவமைப்பு மாற்றப்பட்டு, சாலையில் அதிக கவனம் ஈர்க்கும் தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் கிரே, வெள்ளை, பச்சை, பச்சை-கருப்பு, சிவப்பு-கருப்பு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். லாஸ்ட்-மைல் டெலிவரி தேவைகளுக்கு ஏற்றதாக இந்த ஸ்கூட்டர், அதிகபட்சமாக 150 கிலோ வரை சரக்கு ஏற்றும் திறன் கொண்டது. பயண வசதிக்காக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறத்தில் ஸ்பிரிங்-லோடெட் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்-பின் டயர்கள் முறையே 90/90-12 மற்றும் 90/100-10 அளவில் உள்ளது.
வசதிகள் அடிப்படையில், இதில் டிஜிட்டல் டாஷ்போர்டு, கீலெஸ் என்ட்ரி, மொபைல் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன. பாதுகாப்புக்காக ஆண்டி-தீஃப் சிஸ்டம், அணுகும்போது லாக்/அன்லாக், சைடு ஸ்டாண்ட் அலர்ட், மேலும் ரியல்-டைம் வாகன டயக்னோஸ்டிக்ஸ் போன்ற ஸ்மார்ட் வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. உறுதியான பிளாஸ்டிக் பாடி அமைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கூட்டருக்கு 2 ஆண்டு வாகன வாரண்டி மற்றும் 1 ஆண்டு பேட்டரி வாரண்டி வழங்கப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 60 முதல் 70 கி.மீ. வரை ரேஞ்ச் தரும் என நிறுவனம் கூறியுள்ளது.

