MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.64 ஆயிரம் பைக் 65 கிமீ மைலேஜ் தருதுங்க.. ஹீரோ பைக்குக்கு கடும் போட்டி.. உடனே வாங்குங்க

ரூ.64 ஆயிரம் பைக் 65 கிமீ மைலேஜ் தருதுங்க.. ஹீரோ பைக்குக்கு கடும் போட்டி.. உடனே வாங்குங்க

ஹோண்டா ஷைன் 100, குறைந்த விலை, அதிக மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவற்றைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது. தினசரி பயணங்களுக்கு ஏற்ற கம்யூட்டர் பைக்காக திகழ்கிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 27 2026, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குறைந்த விலையில் அதிக மைலேஜ் பைக்
Image Credit : Google

குறைந்த விலையில் அதிக மைலேஜ் பைக்

புதிய பைக் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? குறைந்த விலை, அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு ஆகிய மூன்றையும் ஒரே மாடலில் தேடுபவர்களுக்கு ஹோண்டா ஷைன் 100 ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். தினசரி அலுவலகப் பயணம், குடும்பத் தேவைகள் போன்றவற்றிற்கு ஏற்ற கம்யூட்டர் பைக்காக இது பிரபலமாகியுள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்க குடும்பங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

24
ஹோண்டா ஷைன் 100 பைக் விலை
Image Credit : honda

ஹோண்டா ஷைன் 100 பைக் விலை

இந்த மாடல் டெல்லியில் ரூ.64,004 (எக்ஸ்-ஷோரூம்) விலை தொடங்குகிறது. ஆன்ரோடு விலை சுமார் ரூ.77,000 வரை செல்கிறது. இந்த விலை வரம்பில், இது ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்-க்கு நேரடி போட்டியாக உள்ளது. குறைந்த முதலீட்டில் நம்பகமான பைக் வாங்க விரும்புபவர்களுக்கு இது பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.

Related Articles

Related image1
இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?
Related image2
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்!.. மாருதி எர்டிகாவுக்கு கடும் போட்டி!.. எந்த கார்.?
34
65–68 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா பைக்
Image Credit : hero, honda

65–68 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா பைக்

ஹோண்டா ஷைன் 100-l 98.98cc திறன் கொண்ட ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. PGM-FI மற்றும் eSP தொழில்நுட்பம் கொண்ட இந்த இன்ஜின் 7.38 PS சக்தி மற்றும் 8.05 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளதால் நகரப் போக்குவரத்து நெரிசலிலும் சுலபமாக ஓட்ட முடியும். 99 கிலோ எடையுடன் குறுகிய தெருக்களிலும் எளிதாக மெனுவேர் செய்ய முடியும். அதிகபட்ச வேகம் 85 கிமீ/மணி வரை உள்ளது.

44
ஹோண்டா ஷைன் 100 அம்சங்கள்
Image Credit : Google

ஹோண்டா ஷைன் 100 அம்சங்கள்

இந்த பைக்கின் முக்கிய சிறப்பு அதன் மைலேஜ். நிறுவனம் தெரிவிப்பதன்படி, லிட்டருக்கு 65 கிலோமீட்டர் வரை செல்கிறது. பல பயனர்கள் 65–68 கிமீ வரை மைலேஜ் கிடைக்கிறது என கூறுகின்றனர். 9 லிட்டர் எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. சர்வீஸ் செலவு சுமார் ரூ.800–ரூ.1,200 வரை மட்டுமே இருக்கும். மேலும் 3 ஆண்டு அல்லது 42,000 கிலோமீட்டர் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. குறைந்த செலவில் நீண்டநாள் பயன் தரும் பைக்காக ஹோண்டா ஷைன் 100 திகழ்கிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹோண்டா ஷைன்
ஹோண்டா பைக்
பைக்குகள்
ஹீரோ ஸ்பிளெண்டர்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
34 கி.மீ மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்கள்.. பணம் சேமிக்க 5 சிறந்த தேர்வுகள்.. முழு லிஸ்ட் உள்ளே
Recommended image2
புதிய டைகன் ஃபேஸ்லிஃப்ட்: பனோராமிக் சன் ரூஃப் மிரட்ட வரும் அம்சங்கள்!
Recommended image3
இந்திய குடும்பங்களின் நம்பிக்கையை பெற்ற ஸ்கூட்டர் ரூ.20000 தள்ளுபடியில்.. Suzuki e-Access..!
Related Stories
Recommended image1
இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?
Recommended image2
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்!.. மாருதி எர்டிகாவுக்கு கடும் போட்டி!.. எந்த கார்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved