600 கிமீ+ ரேஞ்ச்.. 7 சீட்டர் Electric SUV வருது… குடும்ப காருக்கு ‘பெரிய அப்டேட்.!!
ஸ்கோடா தனது புதிய 7-சீட்டர் எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு “பீக்” எனப் பெயரிட்டுள்ளது. இந்த ஃபிளாக்ஷிப் மாடல், 89kWh பேட்டரி மூலம் 600 கிமீ ரேஞ்ச் மற்றும் 200kW ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 2026-ல் உலகளவில் அறிமுகமாகும்.

ஸ்கோடா பீக் 7 சீட்டர் இவி
செக் வாகன தயாரிப்பாளரான ஸ்கோடா, தனது விஷன் 7S கான்செப்ட்டின் உற்பத்திக்குத் தயாரான புதிய 7-சீட்டர் எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு “பீக்” என்ற பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக சந்தைகளில் இந்த மாடல் Mercedes-Benz GLB மற்றும் Peugeot E-5008 போன்ற பிரீமியம் 7-சீட்டர் எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்பட உள்ளது. ஸ்கோடாவின் வரிசையில் இது ஒரு ஃபிளாக்ஷிப் மாடலாக இருப்பதால், Enyaq EV-யை விட உயர்ந்த விலை கொண்டதாகவும், நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த மாடலாக உருவாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய Peak EV உலகளவில் 2026-ல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
600 கிமீ ரேஞ்ச் மின்சார SUV
கடந்த ஆண்டு பாரத் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட Vision 7S கான்செப்ட்டின் டிசைன் பல பகுதிகள், பீக் மாடலிலும் தொடர வாய்ப்பு உள்ளது. சுமார் 4.9 மீட்டர் நீளம் கொண்ட மூன்று வரிசை (மூன்று-வரிசை) அமைப்புடன் வரும் இந்த இவி, கான்செப்ட்டில் இருந்த அதே மாடர்ன் லுக்-ஐ தக்கவைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கேபின் உள்ளே, சுற்றுச்சூழலுக்கு நட்பான வகையில் லெதர் இல்லாத நீடித்த பொருட்கள் பயன்படுத்தப்படலாம் என்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்திய சந்தைக்காக இதன் உற்பத்தி வடிவம் 2027-ல் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
200kW வேகமான சார்ஜிங் EV
பேட்டரி மற்றும் ரெஞ்ச் விஷயத்தில் Vision 7S கான்செப்ட்டில் இருந்து 89kWh பேட்டரி பேக், ஒருமுறை சார்ஜில் 600 கிமீக்கும் மேல் ரெஞ்சை தரும் என ஸ்கோடா முன்பே தெரிவித்துள்ளது. மேலும் Peak EV 200kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வைத்திருக்கும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் RWD மற்றும் AWD ஆகிய இரண்டு டிரைவ் ஆப்ஷன்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

