- Home
- Auto
- டோட்டலாக மாறி மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரெனோ டஸ்டர்! கொட்டி கிடக்கும் சிறப்பு அம்சங்கள்.! விலை என்ன தெரியுமா?
டோட்டலாக மாறி மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரெனோ டஸ்டர்! கொட்டி கிடக்கும் சிறப்பு அம்சங்கள்.! விலை என்ன தெரியுமா?
2026 ரெனோ டஸ்டர் முரட்டுத்தனமான மற்றும் நவீன தோற்றத்தைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் மெல்லிய ஐப்ரோ-ஸ்டைல் LED DRL-கள் மற்றும் கிரில்லில் ஒரு பெரிய 'Duster' பேட்ஜ் உள்ளது.

ஸ்டைலிஷ் லுக்கில் ரெனோ
பல ஆண்டுகளாக இந்தியாவில் டஸ்டர் எஸ்யூவி மாடல் விற்பனையில் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அதன் விற்பனையை நிறுத்தியது ரெனோ. தற்போது மீண்டும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் சந்தைக்கு வருகிறது. இந்த புதிய மாடலின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை இங்கே காணலாம்.
வடிவமைப்பு
2026 ரெனோ டஸ்டர் முரட்டுத்தனமான மற்றும் நவீன தோற்றத்தைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் மெல்லிய ஐப்ரோ-ஸ்டைல் LED DRL-கள் மற்றும் கிரில்லில் ஒரு பெரிய 'Duster' பேட்ஜ் உள்ளது. இது ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. தடிமனான கிளாடிங், சதுர வடிவ வீல் ஆர்ச்கள் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் இதன் சிறப்பம்சங்கள் உள்ளன. பின்புறத்தில், இணைக்கப்பட்ட LED லைட் பார் மற்றும் C-வடிவ டெயில் லேம்ப்கள் அதன் நவீன தோற்றத்தை மேம்படுத்துகின்றன. கருப்பு நிற ரூஃப் ரெயில்கள் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் அதன் முரட்டுத்தனமான தோற்றத்தை கூட்டுகின்றன.
டஸ்டர் கேபின்
புதிய டஸ்டரின் கேபினும் முற்றிலும் நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டார்க் பிளாக் தீமில் கான்ட்ராஸ்ட் ஸ்டிச்சிங் மற்றும் சில்வர் ஆக்சன்ட்களுடன் லேயர்டு டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே என டூயல்-ஸ்கிரீன் அமைப்பு மற்றும் கிளைமேட் கண்ட்ரோலுக்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
நவீன தொழில்நுட்ப வசதிகளால் ரெனோ டஸ்டர் நிரம்பியுள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்புடன் 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், 64-வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், பவர் டெயில்கேட் மற்றும் வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன.
ரெனோ டஸ்டர் விலை
360-டிகிரி கேமரா
பாதுப்பைப் பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் லெவல் 2 ADAS (மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்பு) உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களுடன் டஸ்டர் வருகிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
டஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.50 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.21,000 டோக்கன் தொகையில் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. இந்திய சந்தையில், புதிய டாடா சியரா, ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற கார்களுடன் இது போட்டியிடும்.
