- Home
- Auto
- ரூ.70,000 முதல் ரூ.90,000 வரை: குறைந்த சீட் உயரம் & 50 கி.மீ மைலேஜ் தரும் டாப் 4 லைட் வெயிட் ஸ்கூட்டர்கள்!
ரூ.70,000 முதல் ரூ.90,000 வரை: குறைந்த சீட் உயரம் & 50 கி.மீ மைலேஜ் தரும் டாப் 4 லைட் வெயிட் ஸ்கூட்டர்கள்!
உயரம் குறைவானவர்கள் மற்றும் எடை குறைவான வாகனங்களை ஓட்ட விரும்புபவர்களுக்காக ரூ.90,000-க்கு கீழ் விலையில் கிடைக்கும் 4 சிறந்த ஸ்கூட்டர்களின் விவரங்களை பற்றி பார்போம்.

ரூ 90000-க்கு கீழ் உள்ள பெஸ்ட் ஸ்கூட்டர்கள்
உயரம் குறைவானவர்கள் மற்றும் எடை குறைவான வாகனங்களை ஓட்ட விரும்புபவர்களுக்காக ரூ.90,000-க்கு கீழ் விலையில் கிடைக்கும் 5 ஸ்கூட்டர் மாடல்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிவிஎஸ் ஜெஸ்ட் 110 (TVS Zest 110), ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் (Hero Pleasure+ XTEC), யமஹா ஃபேசினோ 125 Fi (Yamaha Fascino 125 Fi), மற்றும் யமஹா ரே இசட்ஆர் 125 (Yamaha Ray ZR 125) ஆகிய மாடல்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. போக்குவரத்து நெரிசலில் நிறுத்தும்போது கால்கள் எளிதாகத் தரையில் படும் வகையில், உயரம் மற்றும் எடை குறைவான ஸ்கூட்டர்களைத் தேர்ந்தெடுப்பது ஓட்டுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். அத்தகைய 4 ஸ்கூட்டர்களின் விவரங்களை பற்றி விரிவாக பார்போம்.
டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 (TVS Scooty Zest 110)
உயரம் குறைவானவர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இது மிகச்சிறந்த தேர்வாகும். இதன் சீட் உயரம் (Seat height) வெறும் 760 மி.மீ மட்டுமே கொண்டது; எடை 103 கிலோ. இதில் உள்ள 109.7 சிசி ஏர்-கூல்டு என்ஜின் லிட்டருக்கு 45 முதல் 50 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.70,000 முதல் அதிகபட்சமாக ரூ.75,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் (Hero Pleasure+ XTEC)
அடக்கமான வடிவமைப்பு மற்றும் குறைந்த எடை கொண்ட இந்த ஸ்கூட்டர் தினசரிப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது. இதன் சீட் உயரம் 765 மி.மீ ஆகவும், எடை 104 முதல் 106 கிலோ வரையும் உள்ளது. 110.9 சிசி என்ஜின் கொண்ட இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கால் மற்றும் எஸ்.எம்.எஸ் அலர்ட்கள், யுஎஸ்பி (USB) சார்ஜிங் போர்ட் ஆகிய வசதிகள் உள்ளன. சுமார் 50 கி.மீ வரை மைலேஜ் தரும் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.70,000 முதல் அதிகபட்சமாக ரூ.85,000 வரை உள்ளது.
யமஹா ஃபேசினோ 125 Fi (Yamaha Fascino 125 Fi)
எடை குறைவான 125 சிசி ஸ்கூட்டரைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இதன் சீட் உயரம் 780 மி.மீ ஆகவும், எடை 98 முதல் 99 கிலோ வரையும் மட்டுமே உள்ளது. ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் தொழில்நுட்பம், 21 லிட்டர் ஸ்டோரேஜ் இடவசதி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற சிறப்பம்சங்களை இது கொண்டுள்ளது. லிட்டருக்கு சுமார் 49 முதல் 55 கி.மீ வரை மைலேஜ் தரும் இதன் விலை ரூ.78,000 முதல் ரூ.90,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யமஹா ரே இசட்ஆர் 125 (Yamaha Ray ZR 125)
ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் எடை குறைவான ஸ்கூட்டரை எதிர்பார்ப்பவர்களுக்கு யமஹா ரே இசட்ஆர் சரியான தேர்வாக அமையும். இதன் சீட் உயரம் 785 மி.மீ மற்றும் எடை 99 கிலோ ஆகும். 125 சிசி ஹைப்ரிட் என்ஜின் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ஸ்கூட்டர், ஸ்போர்ட்டி வடிவமைப்பு, ஸ்டாப்-ஸ்டார்ட் (Stop-start) சிஸ்டம் மற்றும் சிறந்த பிக்-அப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.78,000 முதல் அதிகபட்சமாக ரூ.90,000 வரை உள்ளது.













