- Home
- Auto
- ரூ.5.74 லட்சம் கார்… டாடா பஞ்ச்சை மிரட்டும் ஹூண்டாய் எக்ஸ்டர்.. விற்பனையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க
ரூ.5.74 லட்சம் கார்… டாடா பஞ்ச்சை மிரட்டும் ஹூண்டாய் எக்ஸ்டர்.. விற்பனையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க
டாடா பஞ்ச்-க்கு கடும் போட்டியாக விளங்கும் ஹூண்டாய் எக்ஸ்டர், அறிமுகமான குறுகிய காலத்திலேயே 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இந்த மைக்ரோ SUV கார் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டாடா பஞ்ச் போட்டியாளர் கார்
இந்தியாவின் மைக்ரோ/மினி SUV சந்தையில் டாடா பஞ்ச் (Tata Punch) மிகப்பெரிய போட்டியாளராக இருந்தாலும், அதற்கு நேரடி சவால் விடுக்கும் வகையில் ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனையில் அசத்தி வருகிறது. குறைந்த விலை, ஸ்டைலிஷ் லுக், பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்கள் ஆகியவற்றால் கவனத்தை ஈர்க்கும் இந்த கார், சமீபத்தில் 2 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் டாடா மற்றும் மாருதி போன்ற நிறுவனங்களுக்கு புதிய அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
எக்ஸ்டர் 2 லட்சம் யூனிட்கள்
ஹூண்டாய் எக்ஸ்டர் முதலில் ஜூலை 10, 2023 அன்று இந்தியாவில் அறிமுகமானது. அறிமுகமானது முதல் தொடர்ந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததால், குறுகிய காலத்திலேயே விற்பனையில் முன்னேறி வருகிறது. SIAM தரவின்படி, 2025 டிசம்பர் இறுதியில் எக்ஸ்டர் விற்பனை 1,99,289 யூனிட்கள் ஆக இருந்தது. அதாவது 2 லட்சம் விற்பனை மைல்ஸ்டோனை எட்ட இன்று 711 யூனிட்கள் மட்டுமே குறைந்த நிலையில் இருந்தது. இந்த இலக்கு 2026 ஜனவரி முதல் வாரத்திலேயே எட்டப்படும் என கூறப்படுகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனை
விற்பனை வேகத்தைக் கணக்கில் எடுத்தால், எக்ஸ்டர் தனது அறிமுகத்துக்குப் பிறகு 13 மாதங்களிலேயே 1 லட்சம் யூனிட்கள் விற்பனை சாதித்தது. தொடர்ந்து 21 மாதங்களில் 1.5 லட்சம் யூனிட்களைத் தாண்டியது. மொத்தமாக 30 மாதங்கள் 2 லட்சம் யூனிட்களை நெருங்கியிருப்பது, இந்த காரின் மார்க்கெட் பிடிப்பை தெளிவாக காட்டுகிறது. அதே சமயம், 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை வளர்ச்சிக்காக சுமார் 17 மாதங்கள் எடுத்ததாகவும் விற்பனைத் தகவல்கள் சொல்கின்றன.
ரூ.5.74 லட்சம் ஹூண்டாய் எக்ஸ்டர்
இந்த செக்மென்ட் டாடா பஞ்ச், நிசான் மேக்னைட், சிட்ரோயன் சி3 போன்றவை எக்ஸ்டர்-க்கு முக்கிய போட்டியாளர்களாக உள்ளன. விலை விஷயத்தில் எக்ஸ்டர்-ன் ஆரம்ப விலை ரூ.5.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். டாப் வேரியன்ட் விலை ரூ.9.61 லட்சம் வரை செல்கிறது. இது பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் உள்ளன. நகரம் மற்றும் அம்சங்களைப் பொறுத்து விலை மாறுபடும் நிலையில், சில நகரங்களில் ஆன்ரோடு விலை ரூ.6.18 லட்சம் முதல் தொடங்குகிறது.

