5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற டூஸான் – இப்போது தள்ளுபடியில் கிடைக்குது.!
ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது பிரீமியம் டூஸான் எஸ்யூவிக்கு நவம்பர் மாத சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற இந்த எஸ்யூவியின் இன்ஜின் விருப்பங்கள் மற்றும் விலை விவரங்களும் இதில் அடங்கும்.

ஹூண்டாய் டூஸான் தள்ளுபடி
ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது பிரீமியம் டூஸான் (டக்சன்) எஸ்யூவி மாடலுக்கு நவம்பர் மாத சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் வாகனம் வாங்குபவர்கள் ரூ.25,000 வரை நேரடி தள்ளுபடி பெறலாம். அதற்குப் பிறகு, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை அல்லது ரூ.25,000 ஸ்கிராப்பேஜ் சலுகை என இரண்டு விருப்பங்களில் ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். டூசானின் தற்போது எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.27.31 லட்சம் முதல் ரூ.33.49 லட்சம் வரை உள்ளது. ஹூண்டாவின் சக்திவாய்ந்த மற்றும் அம்சங்கள் நிறைந்த இந்த 7-சீட்டர் எஸ்யூவி, தொடர்ந்து பிரீமியம் பிரிவில் அதிக வரவேற்பைப் பெறுகிறது.
ஹூண்டாய் டூசான் இரண்டு டிரிம் நிலைகளில் கிடைக்கிறது. அவை பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர். இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின் விருப்பங்கள் உள்ளன. 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கூடிய பெட்ரோல் இன்ஜின் 154 bhp பவர் மற்றும் 192 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. மறுபுறம், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கூடிய டீசல் இன்ஜின் 184 bhp பவர் மற்றும் 416 Nm டார்க் வழங்குகிறது. இரண்டு பவர்டிரெய்ன்களும் அதிக சக்தியையும், மென்மையான ஓட்டத்தையும் வழங்குவதால், நீண்ட பயணங்களுக்கும் நகரப் பயணங்களுக்கும் ஏற்றதாக உள்ளன.
டூஸான் நவம்பர் சலுகை
பாதுகாப்பு தரத்தில், ஹூண்டாய் டூசான் இந்தியா என்சிஏபி (இந்தியா NCAP) சோதனைகளில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. பெரியவர்களின் பாதுகாப்பு பிரிவில், 32-ல் 30.84 புள்ளிகள் பெற்று ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. ஃபிரான்டல் ஆஃப்செட் சோதனையில் 14.84/16 மற்றும் சைடு இம்பாக்ட் சோதனையில் 16/16 என்ற மதிப்பெண்கள் முக்கியமான சாதனையாகும். குழந்தைகளின் பாதுகாப்பு பிரிவில், 49-ல் 42 புள்ளிகள் பெற்று ஐந்து நட்சத்திரத்தைப் பெற்றுள்ளது. டைனமிக் டெஸ்டில் 24/24 மற்றும் சிஆர்எஸ் இன்ஸ்டலேஷவில் 12/12 என சிறந்த வடிவமைப்புக் காட்டியுள்ளது.
டூசானுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தள்ளுபடிகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் என கருத முடியாது. நகரம், மாநிலம், டீலர்ஷிப், ஸ்டாக், வேரியண்ட் மற்றும் வண்ணங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சலுகைகள் மாறுபடும். எனவே, காரை வாங்கும் முன், உங்கள் அருகிலுள்ள ஹூண்டாய் டீலரிடம் தள்ளுபடி விவரங்கள் சரிபார்ப்பது அவசியம்.

