ரூ.1.65 லட்சம் தள்ளுபடி.. 293 கிமீ ரேஞ்ச் கொண்ட மலிவு விலை டாடா எலக்ட்ரிக் கார்
டாடா மோட்டார்ஸ் தனது மின்சார கார்களுக்கு, குறிப்பாக டியாகோ EV-க்கு, டிசம்பர் 2025-ல் பெரும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. 293 கிமீ வரை ரேஞ்ச் கொண்ட இந்த கார், சிறந்த சேமிப்புடன் வாங்க ஒரு அருமையான வாய்ப்பாகும்.

மலிவு எலக்ட்ரிக் கார்
இந்தியாவில் மின்சார கார்களுக்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டிசம்பர் 2025 மாதம் EV வாங்க நினைப்பவர்களுக்கு பொற்கால வாய்ப்பு என்று சொல்லலாம். டாடா மோட்டார்ஸ் பல மாடல்களில் பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மிகச் சிறிய மின்சார கார் Tiago EV-க்கே ரூ. 1.65 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம், மின்சார கார் வாங்க நினைப்பவர்கள் சிறந்த சேமிப்பு பெறலாம்.
டாடாவின் EV வரிசையில் Harrier EV-க்கு குறைந்தபட்சமாக ரூ.1 லட்சம் தள்ளுபடி கிடைக்கிறது. Punch, Nexon, Curvv, Harrier, Tigor ஆகியவை உட்பட ஆறு மின்சார மாடல்கள் டாடா இந்தியாவில் விற்கப்படுகின்றன. இதில் Curvv EV-க்கு (base Creative 45 trim தவிர) ரூ. 3.95 லட்சம் வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் Tiago EV தான் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் வாகனமாகும்.
விலை குறைப்பு
Tiago EV டாடாவின் மிகவும் மலிவான மின்சார கார். MR மற்றும் LR என இரண்டு டிரிம்களில் கிடைக்கும் இந்த EV-க்கு கிரீன் போனஸ், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் லாயல்டி பெனிட் ஆகியவை சேர்த்து ரூ. 1.65 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் நான்கு வெரியெண்ட்களில் கிடைக்கிறது; மும்பை எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.11.14 லட்சம் வரை உள்ளது. 2025 Tiago EV, பெட்ரோல் Tiago போலே டிசைன் கொண்டாலும், புதிய நிறங்களால் கூடுதல் அழகைப் பெற்றுள்ளது.
அதன் இன்டீரியர் கருப்பு-சாம்பல் டோன் டாஷ்போர்டு, ஸ்டியரிங் வீல் கொண்டு வருகிறது. 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ LED ஹெட்லைட்கள், 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இரண்டு பேட்டரி விருப்பங்களில் கிடைக்கிறது. 19.2 kWh பேட்டரி 223 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும். 24 kWh பேட்டரி 293 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும். எனவே, Tiago EV விலை, ரேஞ்ச் மற்றும் தள்ளுபடிகள் இந்த மாதம் வாங்க சிறந்த வாய்ப்பாக உள்ளது.

